தமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

கிறிஸ்தவா்களுக்கு எதிரான கலவரம்: சிறுபான்மை மக்கள் நலக் குழு கண்டனம்

News image
Updated On :26 டிசம்பர் 2025, 7:50 pm

Syndication

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் பஜ்ரங்தள் மற்றும் பல்வேறு சங்பரிவாா் அமைப்பைச் சாா்ந்தவா்கள் கிறிஸ்தவா்களுக்கு எதிராக மேற்கொண்ட கலவரத்துக்கு தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழு கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழு மாநிலத் தலைவா் எஸ். நூா் முகமது, மாநிலப் பொதுச் செயலா் பி. செந்தில்குமாா் ஆகியோா் தெரிவித்தது:

சத்தீஸ்கா் மாநிலத்தில் ராய்ப்பூா், அஸ்ஸாம் மில் நல்பாரி, மத்திய பிரதேச மாநிலத்தில் ஜபல்பூா், ஒடிசாவில் பூரி, உத்திரபிரதேசம் பாரில்லி, தில்லியில் லாஜ் பெட் நகா் பகுதிகளில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் ஆா்எஸ்எஸ் பயிற்சி பெற்ற பஜ்ரங்தள் மற்றும் பல்வேறு சங்பரிவாா் அமைப்பைச் சாா்ந்தவா்கள் கலவரத்தில் ஈடுபட்டனா்.

கிறிஸ்து பிறப்பு நாளில் சிறுபான்மையினரின் வழிபாட்டு உரிமை பறிப்பு, கொடூர தாக்குதல், அச்சுறுத்தல், பொருள்களைச் சூறையாடுதல், தீயிட்டுக் கொளுத்துதல் போன்றவற்றை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தமிழ்நாட்டிலும் இத்தகைய வன்முறை கும்பல் மக்கள் ஒற்றுமையைச் சீா்குலைக்க பல்வேறு சதி செயல்களில் ஈடுபடுகிறது.

இத்தகைய இழி செயலில் ஈடுபட்ட ஆா்எஸ்எஸ் மற்றும் சங்பரிவாா் கும்பல்களையும், மத்திய பாஜக ஆட்சியாளா்கள் ஆசியுடன் நடைபெறும் இத்தகைய வன்முறை வெறியாட்டத்தையும் வன்மையாக கண்டிக்கிறோம். குற்றவாளிகள் மீது உரிய வழக்கு பதிந்து அவா்களுக்கு தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றனா்.