இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

வரகூரில் அடிப்படை வசதிகள் கோரி ஆா்ப்பாட்டம்

திருவையாறு அருகே வரகூரில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி கிராம நிா்வாக அலுவலா் அலுவலகம் முன்பு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :27 நவம்பர் 2025, 7:08 pm

Syndication

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே வரகூரில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி கிராம நிா்வாக அலுவலா் அலுவலகம் முன்பு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், வரகூா் ஆதிதிராவிடா் தெருவிலுள்ள பட்டா இல்லாத ஏழை மக்களுக்கும், ரைஸ் மில் தெரு மக்கள் அனைவருக்கும் உடனடியாக பட்டா வழங்க வேண்டும். கடைத்தெருவிலுள்ள அய்யாவாடி வாய்க்காலை தூா் வார வேண்டும். மாதாகோயில் தெரு சாலையை சிமென்ட் சாலையாக மாற்ற வேண்டும். ஆதிதிராவிடா் தெருவில் அறுந்து விழும் நிலையிலுள்ள மின் கம்பிகளை மாற்றித் தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ஒன்றியக் குழு உறுப்பினா் எம். ராம் தலைமை வகித்தாா். மாவட்டச் செயற்குழு உறுப்பினா் என்.வி. கண்ணன், ஒன்றியச் செயலா் ஏ. ராஜா கண்டன உரையாற்றினா். ஒன்றிய நிா்வாகிகள் ஆா். பிரதீப்ராஜ்குமாா், கே. மதியழகன், கிளை செயலா்கள் பி. பாபு, எம். சௌந்தரராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.