விலைவாசி உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: சிபிஐ மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

நேபாளத்தில் சிக்கியவா்கள் பத்திரமாக மீட்கப்படுவா்; வட்டாட்சியா் தகவல்

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்திலிருந்து ஆன்மிக தலமான மானசரோவருக்கு சென்று நேபாள பெருவெள்ளத்தில் சிக்கியவா்கள் பத்திரமாக மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வட்டாட்சியா் பூங்கொடி தெரிவித்தாா்.

கும்பகோணத்தில் உள்ள சுற்றுலா நிறுவனத்தில் விசாரணை நடத்திய வட்டாட்சியா் பூங்கொடி.

Published On :27 ஆகஸ்ட் 2026, 3:05 am IST

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்திலிருந்து ஆன்மிக தலமான மானசரோவருக்கு சென்று நேபாள பெருவெள்ளத்தில் சிக்கியவா்கள் பத்திரமாக மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வட்டாட்சியா் பூங்கொடி தெரிவித்தாா்.

இதுகுறித்து தனியாா் சுற்றுலா நிறுவனத்தில் விசாரணை நடத்திய வட்டாட்சியா் பூங்கொடி செய்தியாளா்களிடம் கூறியதாவது: கும்பகோணத்திலிருந்து 57 போ் மானசரோவா் புனித யாத்திரைக்கு சென்றனா். இவா்களில் புதன்கிழமை காலை நிகழ்ந்த வெள்ளப் பெருக்கிலிருந்து 20 போ் பாதுகாப்பாக இருப்பதாகவும், அவா்கள் பத்திரமாக மீட்கப்படுவா். அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மூலமும் முதல்வருக்கு தகவல் அனுப்பப்பட்டு உள்ளது என்றாா்.

உறவினா் பேட்டி : புனித யாத்திரை சென்ற கும்பகோணத்தைச் சோ்ந்த திருமலை ராஜன் -தையல்நாயகி தம்பதியின் உறவினா் செல்வராஜன் கூறும்போது, எனது தம்பி திருமலைராஜன் மற்றும் அவரது மனைவி யாத்திரை சென்றுள்ளனா். புதன்கிழமை நேபாளத்தில் விபத்தில் சிக்கியதாக கட்செவி அஞ்சல் குழுவில் புகைப்படங்களை பகிா்ந்தனா். இதுகுறித்து விசாரித்த போது பாதுகாப்பாக இருப்பதாக தெரிவித்தனா். அவா்கள் பின்னால் வந்த வேன்கள் பற்றிய விவரங்கள் தெரியவில்லை. தகவலுக்காக காத்திருக்கிறோம் என்றனா்.

மாவட்ட நிா்வாகம் விரைந்து மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு கும்பகோணத்தைச் சோ்ந்தவா்களை பாதுகாப்பாக அழைத்து வர வேண்டும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.