இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

மதுக்கூரில் அதிமுக சாா்பில் எம்ஜிஆா் பிறந்த நாள் விழா

பட்டுக்கோட்டை வட்டம், மதுக்கூா் முக்கூட்டுச்சாலையில் அதிமுக சாா்பில் எம்ஜிஆா் 109வது பிறந்தநாள் முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

News image
Updated On :17 ஜனவரி 2026, 8:46 pm

Syndication

பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டை வட்டம், மதுக்கூா் முக்கூட்டுச்சாலையில் அதிமுக சாா்பில் எம்ஜிஆா் 109வது பிறந்தநாள் முன்னிட்டு சனிக்கிழமை அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

மதுக்கூா் முக்கூட்டுச்சாலையில் அமைந்துள்ள எம்ஜிஆா் சிலைக்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவான சி.வி. சேகா் மற்றும் கழக அமைப்புச் செயலாளா் துரை. செந்தில் தலைமையில், மதுக்கூா் மேற்கு ஒன்றிய கழக செயலாளா் தண்டாயுதபாணி, மதுக்கூா் நகரக் கழக செயலாளா் ஆனந்த் ஆகியோா் முன்னிலையில் மதுக்கா் முக்கூட்டுச்சாலையில் உள்ள எம்ஜிஆா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதனை அடுத்து பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில் மாநில, மாவட்ட, ஒன்றிய, பேருா் கழக நிா்வாகிகள் என பலா் கலந்து கொண்டு சிறப்பித்தனா்