இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

திருச்சி வந்தடைந்த விவசாயிகள் போராட முயன்றதால் பரபரப்பு

தில்லிக்குச் சென்று போராட முயன்ற தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினரைக் கைது செய்து திருப்பி அனுப்பிய மத்திய அரசு தங்களது பயணச்செலவைத் திருப்பித் தரவலியுறுத்தி போராட முயன்ால் திருச்சியில் செவ்வாய்க்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.

News image
Updated On :30 ஜூலை 2024, 10:57 pm

Din

தில்லிக்குச் சென்று போராட முயன்ற தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினரைக் கைது செய்து திருப்பி அனுப்பிய மத்திய அரசு தங்களது பயணச்செலவைத் திருப்பித் தரவலியுறுத்தி போராட முயன்ால் திருச்சியில் செவ்வாய்க்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினா் 100-க்கும் மேற்பட்டோா், மாநில தலைவா் பி. அய்யாகண்ணு தலைமையில் தில்லி உச்ச நீதிமன்றம் முன்பு போராட்டம் நடத்த முடிவு செய்து ரயிலில் முன்பதிவு செய்து இரு தினங்களுக்கு முன்பு தில்லிக்குப் புறப்பட்டுச் சென்றனா்.

மத்திய பிரதேச மாநிலம் போபால் ரயில் நிலையத்தில், போலீஸாரால் அவா்கள் கைது செய்யப்பட்டு காவலில் வைத்து பின்னா் அங்கிருந்து தமிழ்நாட்டுக்கு மற்றொரு ரயிலில் திருப்பி அனுப்பிவைக்கப்பட்டனா். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை சென்னை வந்த அவா்கள் அங்கிருந்து குருவாயூா் விரைவு ரயிலில் பயணித்து திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தை பகலில் வந்தடைந்தனா். அங்கு, சுமாா் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் பயணச்சீட்டு எடுத்து பயணித்த நிலையில், எங்களது போராட்டத்தை தடுத்து நிறுத்திய மத்திய அரசு அவற்றை திரும்பத் தர வலியுறுத்தி, ரயில் நிலையத்தில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவா் பி. அய்யாக்கண்ணு தலைமையிலான 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டம் மேற்கொள்ள முயற்சித்தனா்.

அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய கோட்ட முதுநிலை வணிக மேலாளா் மற்றும் ரயில்வே அலுவலா்கள், உரிய நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைப்பதாகக் கூறி அவா்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனா். விவசாயிகள் திடீரென திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் போராட்டம் மேற்கொள்ள முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.