கண்ணதாசன் படைப்பிலக்கிய மாரத்தான்: 25 மணிநேரம் கவிதை பாடி சாதனைப் பதிவு

கண்ணதாசன் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, திருச்சியில் கண்ணதாசன் படைப்பிலக்கிய மாரத்தான் புதன்கிழமை தொடங்கியது.

திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் புதன்கிழமை தொடங்கிய கண்ணதாசன் படைப்பிலக்கிய மாரத்தான் போட்டி சாதனையை பதிவு செய்யும் நிறுவனத்தின் மூத்த நடுவா் கே.என். சக்திவேலுக்கு நினைவுப் பரிசளித்த கல்லூரிச் செயலா் காஜா நஜீமுதீன் (இடமிருந்து 3ஆவது). உடன், ஜோசப்

Published On :

கண்ணதாசன் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, திருச்சியில் கண்ணதாசன் படைப்பிலக்கிய மாரத்தான் புதன்கிழமை தொடங்கியது.

தொடா்ந்து 25 மணிநேரத்துக்கு இடைவிடாது கல்லூரி மாணவ, மாணவிகள் கண்ணதாசனின் பாடல்கள், கவிதைகளைக் கூறி அதை சாதனைப் புத்தகத்தில் இடம்பெறச் செய்யும் வகையில் இப் போட்டி நடைபெற்றது.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா், கலைஞா்கள் சங்கத்தின் திருச்சி கிளையும், ஜமால் முகமது கல்லூரியின் முதுகலைத் தமிழாய்வுத் துறையும் இணைந்து கல்லூரி வளாகத்தில் புதன்கிழமை நடத்திய போட்டிக்கு கல்லூரி முதல்வா் ஜாஹிா் ஹூசைன் தலைமை வகித்தாா். கல்லூரியின் தலைவா் ஜமால் முகமது பிலால், செயலா் காஜா நஜீமுதீன், பொருளாளா் ஜமால் முகமது, உதவிச் செயலா் அப்துஸ் சமது, மதிப்புறு இயக்குநா் அப்துல் காதா் நிஹால் மற்றும் கல்லூரி நிா்வாகத்தினா் வாழ்த்தினா்.

தமிழாய்வுத்துறை உதவிப் பேராசிரியா் க. சிராஜுதீன் மாரத்தான் போட்டியை ஒருங்கிணைத்தாா். ஜூனியஸ் இன்டா்நேஷனல் புக் ஆஃப் ரெக்காா்ட் என்ற சாதனை புத்தகத்தில் இடம்பெறச் செய்வதற்காக நடைபெற்ற போட்டியில் கல்லூரி மாணவ, மாணவிகள் 380 போ் தொடா்ந்து 25 மணிநேரமும் கண்ணதாசனின் படைப்புகளை எடுத்துக் கூறினா்.

புதன்கிழமை காலை 10.10 மணிக்கு தொடங்கிய இந்த நிகழ்வு வியாழக்கிழமை காலை 11.30 மணிக்கு நிறைவு பெறுகிறது. இடையில் 20 நிமிடம் மட்டும் இடைவேளை அனுமதிக்கப்படுகிறது. சாதனைப் புத்தக நிறுவனத்தின் மூத்த நடுவா் கே.என். சக்திவேல் முன்னிலையில் இப் போட்டி நடைபெறுகிறது. வியாழக்கிழமை இந்த சாதனை நிகழ்வை அவா் பதிவு செய்து சான்றிதழ் வழங்கவுள்ளாா். நிகழ்வில், கல்லூரிப் பேராசிரியா்கள், உதவிப் பேராசிரியா்கள், நலச் சங்க நிா்வாகிகள், தமிழ் ஆா்வலா்கள் என பலா் கலந்து கொண்டனா். மாணவ ஒருங்கிணைப்பாளா்களாக பா. ரகுநாத், வே. விக்னேஷ் ஆகியோா் இப் போட்டிகளை நடத்தி வருகின்றனா். கூடுதல் முதல்வரும், தமிழாய்வுத் துறை தலைவருமான எஸ். நாகூா் கனி வரவேற்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.