தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

விதிமுறைகளை மீறி செயல்பட்ட 47 கடைகளுக்கு அபராதம்

கடலூரில் உள்ள பெரும்பாலான கடைகளில் தராசில் எடை அளவை குறைத்தும், பொட்டலங்கள் எடை குறைவாகவும் வைத்து விற்பனை செய்வதாக புகார் வந்தது. இதையடுத்து

Updated On :5 ஏப்ரல் 2013, 10:09 am

கடலூரில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட 47 கடைகளுக்கு தொழிலாளர் துறை அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.

கடலூரில் உள்ள பெரும்பாலான கடைகளில் தராசில் எடை அளவை குறைத்தும், பொட்டலங்கள் எடை குறைவாகவும் வைத்து விற்பனை செய்வதாக புகார் வந்தது. இதையடுத்து கடலூர் தொழிலாளர் ஆய்வாளர் புனிதவதி தலைமையில் அதிகாரிகள் குழுவினர் கடலூர்,  செம்மண்டலம் சிட்கோ, புதுப்பாளையம், மஞ்சக்குப்பம் பகுதிகளில் உள்ள கடைகளில் அண்மையில் ஆய்வு செய்தனர். 

ஆய்வில் 40 கடைகள் மற்றும் நிறுவனங்களில் மறுமுத்திரையிடப்படாத எடைமேடை மற்றும் பொட்டலப்பொருட்கள் குறைந்த எடையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. . இதையடுத்து 47 கடைகளில் இருந்த பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் கடைகள் நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் ஒரு முரண்பாடும், முத்திரையிடப்படாத மின்னணு தராசுகள் வைத்திருந்த கடைகளுக்கு ரூ.5,000 அபராதமும், பொட்டலங்கள் எடை குறைந்த அளவில் வைத்திருந்த கடைகளுக்கு ரூ.2,500 அபராதமும் விதிக்கப்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.