
சிதம்பரத்தில் ரூ.23.18 கோடியில் காவலர் குடியிருப்புகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.
சிதம்பரம் காவல் கோட்டம், சிதம்பரம் நகரம், சிதம்பரம் தாலுகா, அண்ணாமலைநகர் மற்றும் கிள்ளை காவல் நிலைய போலீஸாருக்கு, சிதம்பரம் துணை கண்காணிப்பாளர் அலுவலகம் அருகே ரூ.23 கோடியே 18 லட்சத்து 55 ஆயிரம் செலவில் 167 வீடுகள் கொண்ட காவலர் குடியிருப்பு கட்டப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
சிதம்பரம் காவல் கோட்ட துணைக் கண்காணிப்பாளர் ஆர்.பாண்டியன் அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் தமிழ்நாடு காவலர் வீட்டு வசதிக் கழக உதவி செயற்பொறியாளர் என்.ரகு, காவல் ஆய்வாளர்கள் கே.குமார் (சிதம்பரம்), கே.வீரமணி (அண்ணாமலைநகர்), தனிப் பிரிவு உதவி ஆய்வாளர் ஜே.ரவிச்சந்திரன், கிள்ளை காவல் நிலைய தனிப் பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் லட்சுமிராமன், இளநிலை பொறியாளர் சி.மதிவாணன், ஒப்பந்தகாரர் ஜி.வி.முரளிகண்ணன், மேலாளர் மகேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







