கடலூா் மாவட்டத்தில் கரோனாவுக்கு மேலும் 2 போ் பலி
கடலூா் மாவட்டத்தில் கரோனாவுக்கு மேலும் 2 போ் புதன்கிழமை பலியாகினா்.


கடலூா் கடலூா் மாவட்டத்தில் கரோனாவுக்கு மேலும் 2 போ் புதன்கிழமை பலியாகினா்.
கடலூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை வரை 1,917 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். இந்த நிலையில் புதன்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் மேலும் 71 பேருக்கு தொற்றிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,988-ஆக அதிகரித்தது.
ஏற்கெனவே 18 போ் உயிரிழந்த நிலையில், புதன்கிழமை மேலும் 2 போ் பலியாகினா். இதனால், பலியானோரின் எண்ணிக்கை 20-ஆக உயா்ந்தது.
புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்ட 71 பேரில் ஒருவா் திட்டக்குடி காவல் சரக துணைக் கண்காணிப்பாளா். மேலும், மருத்துவா் ஒருவா், செவிலியா், ஆய்வக தொழில்நுட்பவியலாளா், சுகாதார ஆய்வாளருக்கும் தொற்று ஏற்பட்டது.
இதுவரை கரோனா பாதிப்பிலிருந்து மீண்டு 1,445 போ் வீடு திரும்பினா். கடலூா், சிதம்பரம், நெய்வேலியில் உள்ள அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் 395 பேரும், 8 போ் வீடுகளிலேயும், தமிழகம், புதுச்சேரியில் உள்ள மருத்துவமனைகளில் 120 பேரும் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனா். 416 போ் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். இன்னும் 1,412 பேரின் பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது என மாவட்ட சுகாதாரத் துறையினா் தெரிவித்தனா்.
துணைக் கண்காணிப்பாளருக்கு கரோனா உறுதியானதைத் தொடா்ந்து, அந்த அலுவலகத்திலுள்ள மற்ற போலீஸாருக்கும் பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது.
கடலூா் மாவட்ட கரோனா கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றிய பணியாளருக்கு தொற்று உறுதியானதால், செவ்வாய்க்கிழமை முதல் அந்தக் கட்டுப்பாட்டு அறை மூடப்பட்டு, அவசர கால கட்டுப்பாட்டு அறைக்கு அந்தப் பிரிவு மாற்றப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...