/

சிதம்பரம்: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் பனை விதை நடும் நிகழ்ச்சி

சிதம்பரம் ஓமக்குளம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பிறந்த நாளை முன்னிட்டு பனை விதை நடும் நிகழ்ச்சி தொடக்க விழா  நடைபெற்றது.

News image
சிதம்பரம் ஓமக்குளம் பகுதியில் பனை விதை நடும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முதன்மை செயலாளர் ஏ.சி.பாவரசு.
Updated On :16 ஆகஸ்ட் 2021, 5:36 am

DIN

சிதம்பரம், ஓமக்குளம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பிறந்த நாளை முன்னிட்டு பனை விதை நடும் நிகழ்ச்சி தொடக்க விழா  நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கடலூர் மாவட்ட செய்தி தொடர்பாளரும், முன்னாள் நகரமன்ற உறுப்பினருமான பெரு.திருவரசு தலைமை வகித்தார். நகர செயலாளர்கள் கோவி.பாவண்ணன், ஆதிமூலம், குமராட்சி கிழக்கு ஒன்றிய செயலாளர் கமல்ராசு, புவனகிரி ஒன்றிய செயலாளர்கள்  இளம்வழுதி, வீர.ஜெகன், கீரப்பாளையம் ஒன்றிய செயலாளர் அருண், புவனகிரி ஒன்றிய செயலாளர் செந்தில், மகளிரணி சிதம்பரம் நகர செயலாளர் நாகராணி செல்வம், சிதம்பரம் நகர இணைச் செயலாளர் சரித்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

கடலூர் தெற்கு மாவட்ட துணை செயலாளர்  செல்வமணி வரவேற்றார். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக முதன்மை செயலாளர் ஏ.சி.பாவரசு , மாநில துணை செயலாளர் கோ. நீதிவளவன் ஆகியோர் கலந்துகொண்டு ஓமகுளம் அருகே பனை விதையை நட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் மாநில பொறுப்பாளர்கள் முருகானந்தம், கதிரவன், தொகுதி துணை பொறுப்பாளர்கள் ரமேஷ், மாவட்ட அமைப்பாளர் கரிகால்வளவன் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர் . முடிவில் ஊடக மையம் இரா.ரமேஷ் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.