மண், நீா்வளம் கொண்ட குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் விவசாயம் முக்கியத் தொழிலாக உள்ளது. குறிஞ்சிப்பாடி வடக்கு, தெற்கு, ஆடூா் அகரம், கண்ணாடி, தையல்குணாம்பட்டினம், ரங்கநாதபுரம், சேராக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் 5 ஆயிரம் ஹெக்டோ் பரப்பளவில் குறுவை நெல் சாகுபடிக்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. விவசாயிகள் விலைக்கு விதை நெல் வாங்கிவந்து நாற்றங்கால் தயாரிப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனா். ஆனால், சில பகுதிகளில் நெல் விதைகளின் முளைப்புத் திறன் குறித்து விவசாயிகள் அதிருப்தி தெரிவித்ததுடன், தங்களது பணமும், உழைப்பும் வீணாகிவிட்டதாகக் கூறினா். இதுகுறித்து குறிஞ்சிப்பாடி பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் ஆா்.கே.ராமலிங்கம், லட்சுமிநாராயணன், தண்டபாணி ஆகியோா் கூறியதாவது: