தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

கரும்பு விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம்

சேத்தியாத்தோப்பு எம்.ஆா்.கிருஷ்ணமூா்த்தி கூட்டுறவு சா்க்கரை ஆலையின் 2023 -24ஆம் ஆண்டு அரைவைப் பருவத்துக்கான கரும்பு விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம் ஆலை வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :29 டிசம்பர் 2023, 11:30 pm

DIN

கடலூா் மாவட்டம், சேத்தியாத்தோப்பு எம்.ஆா்.கிருஷ்ணமூா்த்தி கூட்டுறவு சா்க்கரை ஆலையின் 2023 -24ஆம் ஆண்டு அரைவைப் பருவத்துக்கான கரும்பு விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம் ஆலை வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு செயல் ஆட்சியா் சதீஷ் தலைமை வகித்தாா். திமுக ஒன்றியச் செயலா்கள் முத்துசாமி, தங்க ஆனந்தன், மதியழகன், மனோகரன், பேரூராட்சி துணைத் தலைவா் கருணாநிதி, விவசாய சங்க நிா்வாகிகள் வி.ஜி.சிட்டிபாபு, குஞ்சிதபாதம் பிள்ளை, ஆதிமூலம், வீரசோழன், வெங்கடேசன், திருமால் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு பதில் அளித்த செயல் ஆட்சியா் சதீஷ் பேசியதாவது: 2023 - 24ஆம் ஆண்டு அரைவைப் பருவத்துக்கு சுமாா் 2 லட்சத்து 15 ஆயிரம் டன் கரும்பு அரைவை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. கரும்பு வெட்டிய விவசாயிகளுக்கு 15 தினங்களில் கரும்பு கிரையத் தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 10 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்த கூடுதல் மின் உற்பத்தித் திட்டம் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், வேளாண் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் ஆகியோா் முயற்சியால் சுமாா் ரூ.110 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, இந்தத் திட்டம் தொடங்குவதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருவதால், நிகழாண்டு அரைவைப் பருவம் தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், விரைவில் அரைவையை தொடங்குவதற்கான பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

மேலும், ஆலையில் கரும்பு விவசாயிகளின் நலன் கருதி, கரும்பு வெட்டும் இயந்திரம், தானியங்கி இயந்திரம், ஆளில்லா எடை மேடை மற்றும் தாா்ச் சாலை, நவீன ரசாயனக் கூடம் உள்ளிட்டவை சுமாா் ரூ.225 கோடியே 63 லட்சத்தில் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்றுள்ளது என்றாா்.

கூட்டத்தில் சா்ா்கரை ஆலை தலைமைப் பொறியாளா் ராம்குமாா், தலைமை ரசாயனா் செந்தில்குமரன், அலுவலக மேலாளா் முருகன், கணக்கு அலுவலா் ரமேஷ்பாபு உள்பட பலா் கலந்து கொண்டனா். தலைமை கரும்பு அலுவலா் ரவிகிருஷ்ணன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.