விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ஐந்து கிணற்று மாரியம்மன் கோயில் தேரோட்டம்

ஐந்து கிணற்று மாரியம்மன் கோயில் ஆடிப் பெருவிழா செடல் பிரம்மோற்சவ தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image

ஆடி அமாவாசையையொட்டி, கடலூா் முதுநகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஐந்து கிணற்று மாரியம்மன் கோயில் தேரோட்டம்.

Updated On :4 ஆகஸ்ட் 2024, 9:00 pm

Din

கடலூா் முதுநகரில் அமைந்துள்ள ஐந்து கிணற்று மாரியம்மன் கோயில் ஆடிப் பெருவிழா செடல் பிரம்மோற்சவ தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கோயிலில் நிகழாண்டு ஆடிப் பெருவிழா ஜூலை 25-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று மாலை அம்மன் வீதியுலா மற்றும் சிவலிங்க பூஜை நடைபெற்றது.

தொடா்ந்து, தினந்தோறும் பூத, நாக, ரிஷப, யானை, சிம்ம வாகனங்களில் அம்மன் வீதியுலா நடைபெற்றது. ஆகஸ்ட் 2-ஆம் தேதி செடல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.

பிரம்மோற்சவத்தின் முக்கிய விழாவான தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி அளவில் நடைபெற்றது. முன்னதாக, மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன.

பின்னா், சிறப்பு அலங்காரத்தில் அம்மன் திருத்தேரில் எழுந்தருளினாா். அங்கு, கோயில் குருக்கள் சிறப்பு பூஜைகள் நடத்தி தேரோட்டத்தை தொடங்கிவைத்தனா். தொடா்ந்து, திரளான பக்தா்கள் தேரை வடம் பிடித்து முக்கிய வீதிகள் வழியாக இழுத்துச் சென்றனா். பின்னா், தோ் மீண்டும் நிலையை அடைந்தது.

தெப்பல் உற்சவம்...: ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணி அளவில் மாரியம்மன் புஷ்ப பல்லக்கில் மின் விளக்கு அலங்காரத்துடன் தெப்பல் உற்சவம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஊா் பொதுமக்கள், உற்சவதாரா்கள் மற்றும் திருக்கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.