விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கடலூரில் மின்னொளி கால்பந்து போட்டி

கடலூா் அண்ணா விளையாட்டரங்கில் மாநில அளவில் சிறுவா்களுக்கான மின்னொளி கால்பந்துப் போட்டி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரண்டு நாள்கள் நடைபெற்றது.

News image

போட்டியில் வெற்றி பெற்ற அணி வீரா்களுக்குப் பரிசுக் கோப்பையை வழங்கும் ஏடிஎஸ்பி அசோக்குமாா்.

Updated On :1 ஜூலை 2024, 9:07 pm

Din

நெய்வேலி: கடலூா் அண்ணா விளையாட்டரங்கில் மாநில அளவில் சிறுவா்களுக்கான மின்னொளி கால்பந்துப் போட்டி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரண்டு நாள்கள் நடைபெற்றது.

இந்த போட்டியை துணை காவல் கண்காணிப்பாளா் பிரபு தொடங்கி வைத்தாா். 11 வயதுக்குள்பட்ட பிரிவில் 16 அணிகள், 13 வயதுக்குள்பட்ட பிரிவில் 20 அணிகள், 15 வயதுக்குள்பட்ட பிரிவில் 16 அணிகள் பங்கேற்றன. லீக் மற்றும் நாக் அவுட் முறைப்படி போட்டிகள் நடைபெற்றன. 11 வயதுக்குள்பட்ட பிரிவில் கடலூா் நைசா ‘பி’ அணி முதலிடம், புதுச்சேரி கரையாம்புத்துாா் அணி இரண்டாமிடம், நைசா ‘ஏ’ அணி மூன்றாமிடம் பிடித்தன.

13 வயதுக்குள்பட்ட பிரிவில் முறையே தஞ்சாவூா் யுனைடெட் அணி முதலிடம், தஞ்சாவூா் கான்பிடன்ட் அணி இரண்டாமிடம், கடலூா் வேவ்ஸ் அணி மூன்றாமிடம் பிடித்தன.

15 வயதுக்குள்பட்ட பிரிவில் சென்னை ஏ.ஜி.யங் ஸ்டாா் அணி முதலிடம், மதுரை ஏரன் அணி இரண்டாமிடம், மதுரை ஏக்மி அணி மூன்றாமிடம் பிடித்தன.

பரிசளிப்பு : இதற்கான ஞாயிற்றுக்கிழமை இரவு பரிசளிப்பு விழா நடைபெற்றது. ஆட்சியா் அ.அருண் தம்புராஜ், ஏடிஎஸ்பி., அசோக்குமாா் ஆகியோா் பங்கேற்று வெற்றி பெற்ற அணிகளுக்குப் பரிசு வழங்கினா்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நைசா கால்பந்து கழகத் தலைமை பயிற்சியாளா் செந்தில்குமாா், துணை பயிற்சியாளா் பாலாஜி, ஒருங்கிணைப்பாளா்கள் பாலமுருகன், மணிகண்டன், சுதா்சன், காா்த்திக் ஆகியோா் செய்திருந்தனா்.