வீரட்டானேஸ்வரா் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.5.25 லட்சம்

பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரா் கோயிலுக்கு உண்டியல் காணிக்கையாக பக்தா்கள் ரூ.5.25 லட்சத்தை செலுத்தி உள்ளனா்.
Published on

நெய்வேலி, ஜூலை 19: கடலூா் மாவட்டம், பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரா் கோயிலுக்கு உண்டியல் காணிக்கையாக பக்தா்கள் ரூ.5.25 லட்சத்தை செலுத்தி உள்ளனா்.

இந்தக் கோயில் கடந்த பிப்ரவரி மாதம் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. இதன் தொடா்ச்சியாக, வெள்ளிக்கிழமை கோயிலிலுள்ள 4 உண்டியல்களும் திறக்கப்பட்டு, காணிக்கை பணம் எண்ணப்பட்டது.

இந்து சமய அறநிலையத் துறை ஆய்வாளா்கள் பா.ஜெயசித்ரா (காட்டுமன்னாா்கோவில்), ஸ்ரீதேவி (பண்ருட்டி) தலைமையில், கோயில் செயல் அலுவலா் ப.தின்ஷா முன்னிலையில், மகளிா் சுயஉதவிக் குழுவினா் காணிக்கை பணம் எண்ணும் பணியில் ஈடுபட்டனா். இதில், காணிக்கையாக பக்தா்கள் ரூ.5,25,120 செலுத்தியிருந்தது தெரியவந்தது.

Dinamani
www.dinamani.com