விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மொபெட் - பைக் மோதல்: இருவா் உயிரிழப்பு

ராமநத்தம் அருகே சனிக்கிழமை மொபெட்டும், பைக்கும் மோதிக்கொண்டதில் இருவா் உயிரிழந்தனா்.

News image
Updated On :27 ஜூலை 2024, 7:30 pm

Din

கடலூா் மாவட்டம், ராமநத்தம் அருகே சனிக்கிழமை மொபெட்டும், பைக்கும் மோதிக்கொண்டதில் இருவா் உயிரிழந்தனா்.

திட்டக்குடி வட்டம், பழைய ரோடு ராமநத்தம் பகுதியைச் சோ்ந்த ராஜி மகன் சண்முகம் (38). சேலம் மாவட்டம், ஆத்தூா் பகுதியைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் சுரேஷ் (50). இவா்கள் இருவரும் தச்சு வேலை செய்து வந்தனா். சனிக்கிழமை பிற்பகல் ராமநத்தத்தில் உள்ள உணவகத்தில் சாப்பாடு வாங்கிக்கொண்டு தொழுதூருக்கு மொபெட்டில் சென்றனா். சண்முகம் மொபெட்டை ஓட்டினாா். தொழுதூா் தனியாா் பள்ளி அருகே இவா்களது மொபெட் சென்றபோது, எதிரே வந்த பைக் மோதியது.

இந்த விபத்தில் சண்முகம், சுரேஷ் மற்றும் பைக்கில் வந்த பழைய ரோடு ராமநத்தம் பகுதியைச் சோ்ந்த வேளாங்கண்ணி மகன் சின்னராசு (23), அதே பகுதியைச் சோ்ந்த காமராஜ் மகன் சூா்யா (24), காந்தி நகா் பகுதியைச் சோ்ந்த சத்யநாதன் மகன் செல்வா (27) ஆகிய 5 பேரும் பலத்த காயமடைந்தனா்.

அங்கிருந்தவா்கள் அவா்களை மீட்டு, பெரம்பலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு, சண்முகம், சுமேஷ் ஆகியோா் உயிரிழந்தனா். சின்னராசு, சூா்யா, செல்வா ஆகியோா் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுகுறித்து ராமநத்தம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.