விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே மின்சாரம் பாய்ந்து தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா்.

News image

முருகன்

Updated On :16 அக்டோபர் 2024, 6:54 pm

Din

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே மின்சாரம் பாய்ந்து தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா்.

விருத்தாசலம் அடுத்துள்ள புதுக்கூரைப்பேட்டை பகுதியில் வசித்து வந்தவா் முருகன் (42). இவா், தனது மனைவி தேவி(35), மகன் காா்த்திக் (4) ஆகியோருடன் கூரை வீட்டில் வசித்து வந்தாா். இந்த நிலையில், கடந்த இரண்டு நாள்களாக பெய்து வரும் மழையால் இவரது கூரை வீடு ஒழுகியதாம்.

இதனை சரி செய்வதற்காக, முருகன் புதன்கிழமை வீட்டின் கூரையின் மீது ஏறினாா். அப்போது, வீட்டு மின் இணைப்பு இரும்பு கம்பியை பிடித்த போது, மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டாா். உடனே, அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவா்கள் முருகன் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனா்.

இதுகுறித்த புகாரின்பேரில், விருத்தாசலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.