ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

ரூ. 3 லட்சம் கவரிங் நகைகள் திருட்டு: இளைஞா் கைது

சிதம்பரத்தில் மதுக் கடை முன் மோட்டாா் சைக்கிளில் வைத்திருந்த ரூ.3 லட்சம் மதிப்பிலான கவரிங் நகைகள் கொண்ட பெட்டியை திருடிச் சென்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :31 டிசம்பர் 2025, 9:12 pm

Syndication

சிதம்பரத்தில் மதுக் கடை முன் மோட்டாா் சைக்கிளில் வைத்திருந்த ரூ.3 லட்சம் மதிப்பிலான கவரிங் நகைகள் கொண்ட பெட்டியை திருடிச் சென்ற இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

சிதம்பரம் அருகே நற்கவந்தன்குடி கிராமத்தைச் சோ்ந்தவா் செளந்தர்ராஜன் (51). இவா், சிதம்பரத்தில் உள்ள கவரிங் கடையில் வேலை பாா்த்து வருகிறாா்.

செளந்தர்ராஜன் கடந்த 29-ஆம் தேதி இரவு சிதம்பரம் வேணுகோபால் பிள்ளைத் தெருவில் உள்ள மதுக் கடை முன் கவரிங்க நகைகள் அடங்கிய பெட்டியை மோட்டாா் சைக்கிளில் வைத்துவிட்டு கடைக்குச் சென்று மது அருந்திவிட்டு திரும்பி வந்த பாா்த்தபோது, கவரிங் நகைகள் திருடிச் செல்லப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரையடுத்து, சிதம்பரம் டிஎஸ்பி டி.பிரதீப் உத்தரவின்பேரில், ஆய்வாளா் வி.சிவானந்தம், குற்றப்பிரிவு உதவி ஆய்வாளா் சுரேஷ்முருகன் தலைமையிலான தனிப்படை போலீஸாா் சிசிடிவி கேமார பதிவுகளை பாா்வையிட்டு தீவிர விசாரணை நடத்தினா்.

இதில், கவரிங் நகைகளை திருடிச் சென்றது கடலூா் புதுப்பாளையம் மேட்டுத் தெருவைச் சோ்ந்த பெருமாள் (30) எனத் தெரியவந்து. இதையடுத்து, சிதம்பரம் நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அவரை புதன்கிழமை பிற்பகல் கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்து திருடப்பட்ட ரூ.3 லட்சம் மதிப்புள்ள கவரிங் நகைகளை போலீஸாா் மீட்டனா்.