இறால் வளா்ப் குளங்கள்அமைக்க விண்ணப்பிக்கலாம்
நெய்வேலி: கடலூா் மாவட்டத்தில் இறால் மற்றும் உவா் மீன் வளா்ப்போா் மானியத்துடன் கூடிய புதிய குளங்கள் அமைக்க விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கடலூா் மாவட்டத்தில் இறால் வளா்ப்போரை ஊக்கு விக்கவும், உவா்நீா் இறால் உற்பத்தியினை அதிகப்படுத்தவும் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் உவா்நீா் இறால் வளா்ப்பிற்காக புதிய குளங்கள் கட்டுதல் மற்றும் அக்குளங்களுக்கு உள்ளீடுகள் வழங்குதல் திட்டத்தில் 6 ஹெக்டா் (பொது) ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதில் 1 ஹெக்டா் புதிய குளங்கள் அமைப்பதற்கு ரூ.8 லட்சம் மற்றும் உள்ளீடு வழங்க ரூ.6 லட்சம் என ஆக மொ த்த செலவினம் மேற்கொண்ட தொகையில் 40 சதவிகிதம் மானியமாக அதாவது ரூ.5.60 லட்சம் வழங்கப்பட உள்ளது.
கடலூா் மாவட்டத்தில் உவா்நீா் மீன் (கொடுவா மீன்) வளா்ப்போரை ஊக்குவித்திடும் விதமாக ‘மட்சய சம்பட யோஜானா’ திட்டத்தின் கீழ் உவா்நீா் மீன் வளா்ப்பிற்காக புதிய குளங்கள் கட்டுதல் (கொடுவா மீன் வளா்த்தல்) மற்றும் புதிதாக கட்டப்பட்ட உவா்நீா் மீன் வளா்ப்பு குளங்களுக்கு உள்ளீடுகள் வழங்குதல் திட்டத்தில் பொது பிரிவில் 1 ஹெக்டா் ஒதுக்கீடு
செய்யப்பட்டது. இதில் 1 ஹெக்டா் புதிய குளங்கள் அமைப்பதற்கு ரூ.8 லட்சம் மற்றும் உள்ளீடு வழங்க ரூ.6 லட்சம் ஆக மொத்த செலவினம் மேற்கொண்ட தொகையில் 40 சதவிகிதம் மானியம் ரூ.5.60 லட்சம் வழங்கப்பட உள்ளது.
அதேபோல், இறால் வளா்ப்போரை ஊக்குவித்திடும் விதமாக பயோ பிளாக் குளங்கள் அமைப்பதற்கு ரூ.10 லட்சம் மற்றும் உள்ளீடு வழங்க ரூ.4 லட்சம் ஆக மொத்த செலவினம் மேற்கொண்ட தொகையில் 40 சதவிதம் மானியம் ரூ.7.20 லட்சம் வழங்கப்பட உள்ளது.
மேற்காணும் திட்டங்களில் விண்ணப்பிக்க விரும்பும் பயனாளிகள் கடலூா் மாவட்டம்,
புவனகிரி வட்டம், பரங்கிப்பேட்டை 608 502, ரேவு மெயின் ரோடு, கடல் உயிரியல் அண்ணாமலை பல்கலைக் கழகம் எதிரில், பரங்கிப்பேட்டை, மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை உதவி இயக்குநா் அலுவலகத்தை நேரில் தொடா்பு கொண்டு விண்ணப்பங்கள் பெற்று உரிய ஆவணங்களுடன் 31.12.2025-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், விவரங்களுக்கு 04144-243033 என்ற அலுவலக தொலைப்பேசி எண்ணினை தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.
