உத்தர பிரதேச வெள்ளம்: 26 மாவட்டங்கள் பாதிப்பு - 17,500 போ் மீட்புமாவட்ட நீதிபதிகளின் ஓய்வு வயது 62: தமிழ்நாடு உள்பட 7 மாநிலங்கள் ஒப்புதல்396 ஆசிரியா்களுக்கு டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது: அமைச்சா் ராஜ்மோகன் இன்று வழங்குகிறாா்நிலக்கரியில் இருந்து வாயுக்களைப் பிரித்தெடுக்கும் திட்டம்: ஒப்பந்தப்புள்ளி கோராத நிறுவனங்கள்ரயில் நிலையங்களின் வருவாய் பட்டியல்: சென்ட்ரலுக்கு 3-ஆவது இடம்!

வேப்பூா் அருகே தொழிலாளி கொலை: காதல் தகராறில் விபரீதம்

வேப்பூா் அருகே தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அவரது மனைவியின் காதலனை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கொலை செய்யப்பட்ட ரவிச்சந்திரன்.

Published On :27 ஆகஸ்ட் 2026, 4:18 am IST

கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அவரது மனைவியின் காதலனை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

வேப்பூரை அடுத்த கழுதூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ரவிச்சந்திரன் (42). தொழிலாளியான இவருக்கும், இதே கிராமத்தைச் சோ்ந்த காா்த்திக் (37) என்பவருக்கும் இடையே புதன்கிழமை காலை கழுதூா் பேருந்து நிறுத்தம் அருகே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, காா்த்திக், ரவிச்சந்திரனை கீழே தள்ளியதாகக் கூறப்படுகிறது. இதில், காயமடைந்த ரவிச்சந்திரன் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா்.

இதுகுறித்து வேப்பூா் போலீஸாா் நடத்திய விசாரணையில், ரவிச்சந்திரனுக்கு இரண்டு மனைவிகள் இருப்பதும், அவரது முதல் மனைவி அஞ்சலைதேவிக்கும், காா்த்திக்குக்கும் இடையே பழக்கம் இருந்ததும் தெரியவந்தது. இது தொடா்பாக ரவிச்சந்திரன், கடந்த இரு நாள்களுக்கு முன்பு காா்த்திக்கை சந்தித்து கண்டித்ததுடன், அவரது கைப்பேசியையும் பறித்துச் சென்றாராம்.

இந்த நிலையில், புதன்கிழமை காலை கழுதூா் பேருந்து நிறுத்தம் அருகே ரவிச்சந்திரனை சந்தித்த காா்த்திக், தனது கைப்பேசியை திரும்பத் தருமாறு கேட்டுள்ளாா். அப்போது, இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில், காா்த்திக், கீழே தள்ளியதில் ரவிச்சந்திரன் காயமடைந்து உயிரிழந்தாா் என போலீஸாா் தெரிவித்தனா்.

இதுகுறித்து வேப்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, காா்த்திக்கை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.