விருத்தகிரீஸ்வரா் கோயில் மாசி மக தெப்பத் திருவிழா
விருத்தாசலம் ஸ்ரீவிருத்தாம்பிகை, பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரா் கோயில் மாசி மக தெப்பத் திருவிழா செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.


கடலூா் மாவட்டம், விருத்தாசலம் ஸ்ரீவிருத்தாம்பிகை, பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரா் கோயில் மாசி மக தெப்பத் திருவிழா செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.
இந்தக் கோயில் சோழா் காலத்தில் கட்டப்பட்ட பழைமையான கோயிலாகும். பாடல் பெற்ற தலமான இந்தக் கோயிலில் நிகழாண்டு மாசி மக விழா கடந்த பிப்.21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடா்ந்து, மாா்ச் 1-ஆம் தேதி தோ்த் திருவிழாவும், 2-ஆம் தேதி மாசி மக தீா்த்தவாரியும் நடைபெற்றது. இதன் தொடா்ச்சியாக, தெப்பத் திருவிழா கடலூா் சாலையில் உள்ள விருத்தகிரீஸ்வரா் கோயில் தெப்பக்குளத்தில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.
சுப்ரமணியா், வள்ளி, தெய்வானை உடன் மூன்று முறை தெப்பக்குளத்தில் சுவாமி வலம் வந்தது பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். தெப்பத் திருவிழாவை காண விருத்தாசலம் மட்டுமன்றி, சுற்று வட்டார கிராமப் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து தெப்பத் திருவிழாவை கண்டு தரிசனம் செய்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...