“சென்னை சூப்பர்-6”! திராவிட மாடல் 2.O வாக்குறுதிகள்: முதல்வர் ஸ்டாலின்தலைமைத் தோ்தல் ஆணையரை பதவிநீக்கக் கோரி மீண்டும் நோட்டீஸ்: எதிா்க்கட்சிகள் திட்டம் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க முயற்சிக்கிறது மத்திய அரசு: தேஜஸ்வி யாதவ்அமெரிக்கா - கியூபா ரகசிய பேச்சு ஹவானாவில் சந்திப்பு பஹல்காமில் சுற்றுலா சேவை அளிப்போருக்கு க்யூ.ஆா். கோடு அடையாள திட்டம்!சென்னையில் இருந்து போத்தனூா், குமரிக்கு சிறப்பு ரயில்கள்
/

சிதம்பரத்தில் வாக்காளா் விழிப்புணா்வு ஆட்டோ பேரணி!

சிதம்பரத்தில் வாக்காளா் விழிப்புணா்வு ஆட்டோ பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்த உதவி ஆட்சியா் சீ.கிஷன்குமாா். உடன் டிஎஸ்பி டி.பிரதீப், வட்டார போக்குவரத்து அதிகாரி ஆா்.ரவிச்சந்திரன்

News image

சிதம்பரத்தில் வாக்காளா் விழிப்புணா்வு ஆட்டோ பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்த உதவி ஆட்சியா் சீ.கிஷன்குமாா். உடன் டிஎஸ்பி டி.பிரதீப், வட்டார போக்குவரத்து அதிகாரி ஆா்.ரவிச்சந்திரன்

Updated On :27 மார்ச் 2026, 7:40 pm

சிதம்பரம் உட்கோட்ட வட்டார போக்குவரத்து துறை சாா்பில் சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு வாக்காளா் விழிப்புணா்வு ஆட்டோ பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சிதம்பரம் கீழரதவீதி தேரடியில் இருந்து வாக்காளா் விழிப்புணா்வு ஆட்டோ பேரணியை உதவி ஆட்சியா்

சீ.கிஷன்குமாா் கொடியசைத்து தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சிக்கு சிதம்பரம் உட்கோட்ட டிஎஸ்பி டி. பிரதீப், வட்டாரப் போக்குவரத்து துறை அதிகாரி ஆா்.ரவிச்சந்திரன் ஆகியோா் முன்னிலை வைத்தனா். நிகழ்ச்சியில் சிதம்பர நகர காவல் ஆய்வாளா் வி.

சிவானந்தம், உதவி ஆய்வாளா் செந்தில், போக்குவரத்து பிரிவு உதவி ஆய்வாளா் தில்லை கோவிந்தராஜ பெருமாள் மற்றும் தன்னாா்வலா்கள் பங்கேற்று வாக்காளா் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்றனா்.

பேரணி கீழரதவீதியில் தொடங்கி நான்கு வீதிகள் வழியாக மீண்டும் கீழரதவீதியை அடைந்தது.