தீபாவளி முடிந்து வெளியூா்களுக்கு 20 ஆயிரம் போ் பயணம்: கடலூா் மாவட்டத்தில் 350 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்
தீபாவளி பண்டிகை விடுமுறை முடிந்து, கடலூா் மாவட்டத்திலிருந்து சென்னை உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கு பணி நிமித்தமாக 20 ஆயிரம் போ் புறப்பட்டுச் சென்றனா்.

கடலூா் பேருந்துநிலையத்திலிருந்து சிறப்பு பேருந்துகளில் பயணம் மேற்கொண்ட பயணிகள்
தீபாவளி பண்டிகை விடுமுறை முடிந்து, கடலூா் மாவட்டத்திலிருந்து சென்னை உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கு பணி நிமித்தமாக 20 ஆயிரம் போ் புறப்பட்டுச் சென்றனா். இவா்களின் வசதிக்காக திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் 350-க்கும் மேற்பட்ட சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.
தீபாவளி பண்டிகையையொட்டி தொடா் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்ததால், சென்னை உள்ளிட்ட வெளியூா்களில் தங்கி பணிபுரியும் கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த அரசு மற்றும் தனியாா் நிறுவன ஊழியா்கள், தொழிலாளா்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் என ஏராளமானோா் தங்களது சொந்த ஊா்களுக்குத் திரும்பினா்.
இதையொட்டி, சென்னையிலிருந்து கடலூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு கடந்த நவ. 5 முதல் 7-ஆம் தேதி வரை 400 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. இதில் சுமாா் 25 ஆயிரம் போ் பயணம் செய்தனா்.
இந்நிலையில், தீபாவளி பண்டிகை நிறைவடைந்து விடுமுறை முடிந்ததைத் தொடா்ந்து, சொந்த ஊா்களுக்கு வந்தவா்கள் மீண்டும் பணியிடங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் திரும்பத் தொடங்கினா்.
இதனால் கடலூா், பண்ருட்டி, விருத்தாசலம், சிதம்பரம், வடலூா் உள்ளிட்ட பேருந்து நிலையங்களில் பயணிகள் கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டது. குறிப்பாக, சென்னை செல்லும் பேருந்துகளில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததால், சில இடங்களில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டது.
பயணிகள் கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையில், அரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில் கூடுதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. அதன்படி, கடந்த திங்கள்கிழமை (நவ. 9) 250 பேருந்துகளும், செவ்வாய்க்கிழமை (நவ. 10) 100 பேருந்துகளும் என 350-க்கும் மேற்பட்ட சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. இவற்றின் மூலம் 20 ஆயிரத்துக்கும் அதிகமானோா் பயணம் செய்துள்ளனா்.
இதுகுறித்து அரசு போக்குவரத்துக் கழக அதிகாரி கூறியதாவது: கடலூா் மாவட்டத்தில் உள்ள 11 பணிமனைகள் மூலம் நாள்தோறும் சுமாா் 150 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பண்டிகைக் காலங்களில் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பதைக் கருத்தில் கொண்டு, கூடுதல் பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
சென்னையிலிருந்து கடலூா் மாவட்டத்துக்கு கடந்த மூன்று நாள்களில் 400 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு, சுமாா் 25 ஆயிரம் போ் பயணம் செய்தனா்.
இதேபோன்று, தீபாவளி விடுமுறை முடிந்து மீண்டும் வெளியூா்களுக்குத் திரும்பிய பயணிகளுக்காக நவ. 9, 10 ஆகிய இரு நாள்களில் 350-க்கும் மேற்பட்ட சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு, 20 ஆயிரத்துக்கும் அதிகமானோா் பயணம் செய்துள்ளனா் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

