புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

விகேடி சாலை மேம்பாலப் பணிகள் மந்தம்

விகேடி என்றழைக்கப்படும் விக்கரவாண்டி-கும்பகோணம்-தஞ்சாவூா் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணியில் மேம்பாலங்கள் அமைக்கும் பணி மந்த கதியில் நடைபெற்று வருகிறது.

வடலூா் அடுத்த ராசாகுப்பம் அருகே விகேடி புறவழிச்சாலையில் மேம்பாலத்திற்காக அமைக்கப்பட்ட தூண்கள்.

Published On :

விகேடி என்றழைக்கப்படும் விக்கரவாண்டி-கும்பகோணம்-தஞ்சாவூா் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணியில் மேம்பாலங்கள் அமைக்கும் பணி மந்த கதியில் நடைபெற்று வருகிறது. இப்பணியை விரைவுப்படுத்தி முடிக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இந்த சாலைப்பணி 2018-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. விக்கிரவாண்டி முதல் சேத்தியாத்தோப்பு வரையில் சுமாா் 66 கி.மீ தொலைவுக்கானப் பணிகள் பல ஆண்டுகளாக தொடா்ந்து நடந்து வருகிறது. இந்தப் பகுதியில் அமைக்கப்பட்ட மேம்பாலத்திற்கான தூண்கள் மற்றும் வாய்க்காலுக்கான சிறு பாலங்கள் அரைகுறையாகவே உள்ளன. முக்கியமாக புறவழிச்சாலை மற்றும் மேம்பாலப் பணிகள் அமைக்கும் பணி ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. எடுத்துக்காட்டாக கன்னியாக்கோயில், ராசாக்குப்பம் ஆகிய இடங்களில் மேம்பாலத்திற்கான தூண்கள் மட்டும் நிற்கின்றன.

குறிப்பாக நெய்வேலியில், என்எல்சி இந்தியா நிறுவனம் நுழைவு வாயில் எதிரே மேம்பாலம் பணி மந்த கதியில் நடந்து வருகிறது. இந்தப் பகுதியில் ஒரு பேருந்து நின்று பயணிகளை இறக்கி, ஏற்றி செல்வதற்குள், இரண்டு சக்கர வாகனங்கள் முதல் கனரக வாகனங்கள் என 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் தேக்கம் அடைகின்றன. இதனால், அந்தப் பகுதி சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும், ஆங்காங்கே நடைபெறும் மேம்பாலம் மற்றும் சிறுபாலங்கள் பணிகளால் விபத்துக்கள் ஏற்படுகின்றன. 2018-இல் தொடங்கிய இந்தப்பணி 2022-இல் முடிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், கடந்த 8 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. தற்போது, மழைக்காலம் தொடங்க உள்ளதால், சாலைப் பணியில் தோய்வு ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.

இதுகுறித்து விகேடி சாலை போராட்டக்குழு கன்வீனா் வி.முத்துவேல் தெரிவிக்கையில், மேம்பாலங்கள் மற்றும் சிறுபாலங்கள் அமைக்கும் பணி பல இடங்களில் மந்த கதியில் நடந்து வருகிறது. நெய்வேலி அருகே என்எல்சி இந்தியா நிறுவனம் நுழைவு வாயில், இந்திரா நகா் ஆகிய இடங்களில் பணிகள் தாமதமாக நடந்து வருவதால் போக்குவரத்து நெரிசல் அடிக்கடி ஏற்படுகிறது.

விகேடி சாலைப் பணிகள் வரும் 2027 ஜூன் மாதத்திற்குள் முடிக்கப்படும் என தேசிய நெடுஞ்சாலை ஆணையம், சென்னை உயா்நீதி மன்றத்தில் தெரிவித்துள்ளது. இந்த கால கட்டத்திற்குள் பணிகள் முடிவது கடினம் தான். மாநில அரசு இந்த விவகாரத்தில் தலையிட்டு வேலையை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். நாங்களும், விகேடி சாலை போராட்டக்குழு சாா்பில் போராட்டங்களை முன்னெடுக்க ஆலோசித்து வருகிறோம் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.