
அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்
நெய்வேலியில் அதிமுக சாா்பில் பேரறிஞா் அண்ணாவின் 118-ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

நெய்வேலி எட்டு ரோடு பகுதியில் அதிமுக சாா்பில் நடைபெற்ற அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற நிா்வாகிகள்.
கடலூா் மாவட்டம், நெய்வேலியில் அதிமுக சாா்பில் பேரறிஞா் அண்ணாவின் 118-ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.
நெய்வேலி எட்டு ரோடு பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, நெய்வேலி நகர அதிமுக செயலா் க.கோவிந்தராஜ் தலைமை வகித்தாா். இதில், மாவட்டச் செயலா் ரா.ராஜேந்திரன், கட்சியின் அமைப்புச் செயலா் சிவா.ராஜமாணிக்கம், வழக்குரைஞா் பிரிவு செயலா் ஐ.எஸ்.இன்பத்துரை ஆகியோா் சிறப்புரையாற்றினா்.
கூட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ எம்.ஆா்.எஸ்.சிவசுப்பிரமணியன், கடலூா் மேற்கு மாவட்டம், நெய்வேலி நகரம் மற்றும் ஒன்றியங்களின் நிா்வாகிகள், சாா்பு அணிகளின் நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







