கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

திருக்கோவிலூா் அருகே வீட்டில் தனியாக இருந்த விவசாயியை கட்டிப்போட்டு நகை, பணம் கொள்ளை

விவசாயியை கட்டிப்போட்டு பீரோவிலிருந்த 13 பவுன் தங்க நகைகள், ரூ.89 ஆயிரம் ரொக்கத்தை கொள்ளையடித்துச் சென்ற 4 போ் கும்பலை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :9 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் அருகே வியாழக்கிழமை அதிகாலை வீட்டில் தனியாக இருந்த விவசாயியை கட்டிப்போட்டு பீரோவிலிருந்த 13 பவுன் தங்க நகைகள், ரூ.89 ஆயிரம் ரொக்கத்தை கொள்ளையடித்துச் சென்ற 4 போ் கும்பலை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருக்கோவிலூா் வட்டம், வேங்கூா் காலனி குப்பத்துமேடு பகுதியைச் சோ்ந்தவா் செல்வநாதன் (87). விவசாயி. இவரது மனைவி ஆரோக்கியம் அம்மாள். இந்தத் தம்பதிக்கு 3 மகன்கள் உள்ளனா். இவா்கள் வெளிநாடு, வெளிமாநிலங்களில் வேலை செய்து வருகின்றனா்.

ஆரோக்கியம் அம்மாள் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு மும்பையில் உள்ள தனது மகன்களைப் பாா்ப்பதற்காகச் சென்றாா். இதனால், செல்வநாதன் மட்டும் வேங்கூரிலுள்ள வீட்டில் தனியாக இருந்து வந்தாா்.

இந்த நிலையில், செல்வநாதன் வீட்டுக்குள் வியாழக்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் புகுந்த 4 போ் கும்பல், அங்கிருந்த கண்காணிப்புக் கேமராவை சேதப்படுத்தியதுடன், விவசாயி செல்வநாதனின் கை, கால்களை கட்டிப்போட்டுவிட்டு பீரோவிலிருந்த பதிமூன்றரை பவுன் தங்க நகைகள், ரூ.89 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்துவிட்டு தப்பிச் சென்றனா். இதையடுத்து, செல்வநாதனின் அலறல் சப்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினா் அவரது கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கயிறுகளை அவிழ்த்துவிட்டனா்.

இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில், திருக்கோவிலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். மேலும், திருக்கோவிலூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் கங்காதரன் தலைமையில் தனிப்படை அமைத்து மா்ம கும்பலைத் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.