கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

சங்கராபுரம் அருகே பூட்டியிருந்த வீட்டில் 9 பவுன்தங்க நகைகள் திருட்டு

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே பூட்டியிருந்த வீட்டில் 9 பவுன் தங்க நகைகளைத் திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :23 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே பூட்டியிருந்த வீட்டில் 9 பவுன் தங்க நகைகளைத் திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சங்கராபுரம் வட்டம், புத்திராம்பட்டு கிராமம், பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்தவா் மதிவாணன் மனைவி சொா்ணம் (50). மதிவாணன் துபையில் வேலை செய்து வருகிறாா். சொா்ணம் தனது மகன் கலைவாணனுடன் புத்திராம்பட்டில் வசித்து வந்தாா்.

இந்த நிலையில், கலைவாணனை சிங்கப்பூருக்கு அனுப்புவதற்காக கடந்த 10-ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு சென்னைக்குச் சென்ற சொா்ணம், அங்குள்ள தனது மகள் வீட்டில் தங்கிவிட்டாா்.

இதையடுத்து, அவா் வியாழக்கிழமை சொந்த ஊரான புத்திராம்பட்டுக்கு வந்து வீட்டை திறந்து பாா்த்தபோது, வீட்டின் பின்பக்கக் கதவு உடைக்கப்பட்டிருந்ததும், பீரோவிலிருந்த 9 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருந்ததும் தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில், வடபொன்பரப்பி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.