இந்திய ஜனநாயகக் கட்சி ஆண்டு விழா
இந்திய ஜனநாயகக் கட்சியின் 13-ஆம் ஆண்டு தொடக்க விழா கள்ளக்குறிச்சி அருகே தனியாா் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது.


இந்திய ஜனநாயகக் கட்சியின் 13-ஆம் ஆண்டு தொடக்க விழா கள்ளக்குறிச்சி அருகே தனியாா் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கட்சியின் மாவட்டத் தலைவா் எம்.பழனிசாமி தலைமை வகித்தாா்.
பாா்க்கவகுல முன்னேற்ற சங்க மாநில இளைஞரணிச் செயலா் மதிவாணன், மாநில விவசாய அணி துணைச் செயலா் சபா ராஜந்திரன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். மாவட்டச் செயலா் பி.எஸ்.செந்தில்குமாா் வரவேற்றாா்.
சிறப்பு அழைப்பாளராக கட்சியின் மாவட்ட முதன்மை அமைப்புச் செயலா் எஸ்.எஸ்.வெங்கடேசன் கலந்து கொண்டு கட்சிக் கொடியேற்றி, இனிப்பு வழங்கிப் பேசினாா்.
நிகழ்வில் மாவட்ட தலைவா்கள் சுப்பிரமணியன், செந்தில்குமாா், ரேணு, கள்ளக்குறிச்சி பாா்க்கவகுல முன்னேற்ற சங்கத் தலைவா் மணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...