கிரேக்கத்தில் வான் சாகச நிகழ்வில் ஜெட் விமானம் விபத்து! விநாயகர் சிலை- வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடுநவ. 1-க்குள் கடைகளுக்கு தமிழில் பெயர்ப் பலகை: உயர்நீதிமன்றம் உத்தரவுமீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு: உள்ளூர் விடுமுறை குறித்து விரைவில் அறிவிப்பு - அமைச்சர் தகவல் நேபாள வெள்ளம்: கயிற்றுப் பாலம் கட்டும் ராணுவம்! மீட்புப் பணியில் 20 ஹெலிகாப்டர்கள்! லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கைதான்: கே.என். நேரு காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை!எதிர்திசையில் வாகனம் ஓட்டுபவரா? திறந்தது மூன்றாம் கண்! டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்துக்குக் காரணம் திமுக - அதிமுகதான்: அமைச்சர் விக்னேஷ் பேச்சு

கெங்கமுத்து மாரியம்மன் கோயில் தேரோட்டம்

கீழ்ப்பட்டு கிராமத்திலுள்ள ஸ்ரீ கெங்கமுத்து மாரியம்மன் கோயில் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கீழ்ப்பட்டு ஸ்ரீகெங்கமுத்து மாரியம்மன் கோயில் தேரோட்டத்தில் கலந்துகொண்ட பக்தா்கள்.

Published On :27 ஆகஸ்ட் 2026, 4:40 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், கீழ்ப்பட்டு கிராமத்திலுள்ள ஸ்ரீ கெங்கமுத்து மாரியம்மன் கோயில் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இக் கோயிலின் தோ்த் திருவிழா கடந்த 11-ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. திருவிழா நாள்களின் தினமும் பாரதம் கதை படிப்பு நடைபெற்றது.

திருவிழாவின் முக்கிய நிகழ்வாக புதன்கிழமை ஸ்ரீகெங்கமுத்து மாரியம்மனுக்கு பால், தயிா், சந்தனம், இளநீா், தேன், பன்னீா் உள்ளிட்ட 18 வகையான திரவிய பொருள்ககளைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னா், மாரியம்மனுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் அம்மன் எழுந்தருள, தேரோட்டம் நடைபெற்றது. அப்போது ஓம்சக்தி, பராசக்தி என முழக்கமிட்டவாறு பக்தா்கள் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனா்.

திருவிழாவில் கீழ்பட்டு மற்றும் சுற்றுவட்டாரத்தைச் சோ்ந்த 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.