இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

பிளஸ் 1 சிறப்பு துணைத் தேர்வு: இன்று முதல் விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்யலாம்

பிளஸ் 1 சிறப்பு துணைத் தேர்வு எழுதியவர்கள் வியாழக்கிழமை (ஆக.30) முதல் விடைத்தாளின் நகலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று புதுவை பள்ளிக் கல்வி இயக்கக இணை இயக்குநர் குப்புசாமி தெரிவித்தார்.

Published On :30 ஜனவரி 2024, 10:08 pm IST

பிளஸ் 1 சிறப்பு துணைத் தேர்வு எழுதியவர்கள் வியாழக்கிழமை (ஆக.30) முதல் விடைத்தாளின் நகலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று புதுவை பள்ளிக் கல்வி இயக்கக இணை இயக்குநர் குப்புசாமி தெரிவித்தார்.
இது குறித்து அவர் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஜூன், ஜூலை 2018 மேல்நிலை முதலாமாண்டு சிறப்பு துணைத் தேர்வெழுதி விடைத்தாள்களின் நகல் கோரி விண்ணப்பித்த தேர்வர்கள் வியாழக்கிழமை (ஆக.30-ஆம் தேதி) பிற்பகல் 2 மணி முதல் scan.tndge.in என்ற இணையதளத்துக்கு சென்று தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து தாங்கள் விண்ணப்பித்த பாடங்களுக்குரிய விடைத்தாள்களின் நகலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விடைத்தாள்களின் நகலை பதிவிறக்கம் செய்தபிறகு மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்பினால் இதே இணையதள முகவரியில் Application for Retotalling-Revaluation என்ற தலைப்பை கிளிக் செய்து விரும்பும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.
இவ்விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து, இரு நகல்கள் எடுத்து செப்.3 மற்றும் 4-ஆம் தேதிகளில் காலை 10 முதல் மாலை 6 மணிக்குள் சம்பந்தப்பட்ட இணை இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டுக்கான கட்டணத்தை இணை இயக்குநர் அலுவலகத்தில் பணமாகச் செலுத்த வேண்டும். 
மறுமதிப்பீட்டுக்கு ஒரு தாள் கொண்ட பாடம்-ரூ.505, இரு தாள் கொண்ட பாடம் (மொழிப்பாடம், ஆங்கிலம் மற்றும் உயிரியல்)-ரூ.1,010, மறுகூட்டலுக்கு ஒரு தாள் கொண்ட பாடம் -ரூ.205, இரு தாள் கொண்ட பாடம் (மொழிப்பாடம், ஆங்கிலம் மற்றும் உயிரியல்)-ரூ.305 எனத் தெரிவித்துள்ளார் குப்புசாமி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.