உத்தர பிரதேச வெள்ளம்: 26 மாவட்டங்கள் பாதிப்பு - 17,500 போ் மீட்புமாவட்ட நீதிபதிகளின் ஓய்வு வயது 62: தமிழ்நாடு உள்பட 7 மாநிலங்கள் ஒப்புதல்396 ஆசிரியா்களுக்கு டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது: அமைச்சா் ராஜ்மோகன் இன்று வழங்குகிறாா்நிலக்கரியில் இருந்து வாயுக்களைப் பிரித்தெடுக்கும் திட்டம்: ஒப்பந்தப்புள்ளி கோராத நிறுவனங்கள்ரயில் நிலையங்களின் வருவாய் பட்டியல்: சென்ட்ரலுக்கு 3-ஆவது இடம்!

இலவச சீருடை வழங்கக் கோரி மாணவர்கள் போராட்டம்

புதுவையில் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச சீருடையை உடனடியாக வழங்கக் கோரி, இந்திய

Published On :30 ஜனவரி 2024, 10:15 pm IST

புதுவையில் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச சீருடையை உடனடியாக வழங்கக் கோரி, இந்திய மாணவர் சங்கத்தினருடன் இணைந்து அந்தப் பள்ளி மாணவர்கள் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுவையில் அரசுப் பள்ளிகள் நிகழ் கல்வி ஆண்டு தொடங்கி 3 மாதங்கள் ஆகின்றன. ஆனால், இதுவரை மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய சீருடைகள் வழங்கவில்லையாம். மேலும், இலவசப் பாட நூல்களும் வழங்கப்படவில்லையாம்.
எனவே, சீருடை, பாட நூல்கள் ஆகியவற்றை வழங்கக் கோரியும், கல்வி உதவித் தொகையை வழங்கக் கோரியும் புதுவை கலிதீர்த்தாள்குப்பத்தில் உள்ள கருணாநிதி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்தனர். அவர்கள் இந்திய மாணவர் சங்கத்தினருடன் சேர்ந்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.  
இந்திய மாணவர் சங்கத்தின் பிரதேசத் தலைவர் ஜெயபிரகாஷ் தலைமை வகித்தார். 
போராட்டத்தில் இந்திய மாணவர் சங்க மத்திய குழு உறுப்பினர் ஆனந்த், பிரதேச துணைச் செயலர் செம்மலர்,  துணைத் தலைவர் செந்தமிழ், பிரதேச செயற்குழு உறுப்பினர்கள் வசந்த், ஸ்டீபன்ராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.
இதுகுறித்து தகவலறிந்த காவல் துறை அதிகாரிகள் மாணவர்களிடம் வந்து பேச்சவார்த்தை நடத்தி, கலைந்து போக வலியுறுத்தினர். இதைத் தொடர்ந்து போராட்டம் முடிவுக்கு வந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.