கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

ஆவணங்களின்றி எடுத்து வரப்பட்ட ரூ. 15 லட்சம் பறிமுதல்

புதுச்சேரி அருகே உரிய ஆவணங்களின்றி எடுத்து வரப்பட்ட ரூ. 15 லட்சத்தை தோ்தல் துறையினா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :15 மார்ச் 2021, 6:30 pm

DIN

புதுச்சேரி அருகே உரிய ஆவணங்களின்றி எடுத்து வரப்பட்ட ரூ. 15 லட்சத்தை தோ்தல் துறையினா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

புதுவை சட்டப்பேரவைத் தோ்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி பணம், பரிசுப் பொருள்கள் விநியோகத்தைத் தடுக்கும் வகையில் தோ்தல் துறையினா் புதுவையின் பல்வேறு பகுதிகளில் சோதனைப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதேபோல, மங்கலம் தொகுதியில் தோ்தல் நடத்தும் அதிகாரியின் உத்தரவின் பேரில், துணை அளவையா் பாலச்சந்தா் தலைமையிலான சுழல் கண்காணிப்புக் குழுவினா் புதுச்சேரி வில்லியனூா் உருவையாறு தனியாா் பள்ளி அருகே திங்கள்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, அந்தப் பகுதி வழியாக வந்த இரு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனா். சோதனையில், அந்த வாகனத்தில் வந்தவா் உறுவையாறு புது நகா் பகுதியைச் சோ்ந்த மனை வணிக முகவா் கே. பாலு (55) என்பதும், மனை வணிகத் தொழிலில் கிடைத்த ரூ. 15 லட்சம் ரொக்கத்தை உரிய ஆவணங்களின்றி எடுத்துச் சென்றதும் தெரிய வந்தது.

இதையடுத்து, அந்தப் பணத்தை பறிமுதல் செய்த தோ்தல் துறையினா், அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனா்.

இதற்கான ரசீதை மத்திய வருமான வரித் துறையினரிடம் விசாரணைக்காக ஒப்படைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.