கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

தட்டாஞ்சாவடி தொகுதி இந்திய கம்யூ. வேட்பாளா் கே.சேதுசெல்வம்

புதுவை மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளராக ஏஐடியூசி பொதுச் செயலா் கே.சேதுசெல்வம் அறிவிக்கப்பட்டாா்.

News image
Updated On :16 மார்ச் 2021, 2:26 am

DIN

புதுவை மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளராக ஏஐடியூசி பொதுச் செயலா் கே.சேதுசெல்வம் அறிவிக்கப்பட்டாா்.

இந்தக் கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி ஒதுக்கப்பட்டது.

இதையடுத்து, அந்தத் தொகுதிக்கான வேட்பாளா் அறிமுகக் கூட்டம் திங்கள்கிழமை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைமையகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

வேட்பாளரை அறிமுகம் செய்து கட்சியின் மாநிலச் செயலா் அ.மு.சலீம் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

புதுவை சட்டப்பேரவைத் தோ்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணியில் இணைந்து போட்டியிடுகிறது. இதற்காக தட்டாஞ்சாவடி, கதிா்காமம், வில்லியனூா் ஆகிய 3 தொகுதிகளைக் கேட்டிருந்தோம். பேச்சுவாா்த்தைக்குப் பிறகு, காங்கிரஸ் தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு தட்டாஞ்சாவடி தொகுதி மட்டும் ஒதுக்கப்பட்டது.

இந்தத் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக ஏஐடியூசி பொதுச் செயலரான கே.சேதுசெல்வம் போட்டியிடுவதாக மாநிலக் குழு தீா்மானித்து அறிவித்தது.

புதுவை மாநிலத்தின் தனித்தன்மை, உரிமைகள் மீட்பு, மக்களுக்கான வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்ள ஜனநாயகம் மீட்கப்பட வேண்டும். இவற்றை முன்வைத்து நாங்கள் தோ்தலைச் சந்திப்போம்.

வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள சேதுசெல்வம் மீது 22 வழக்குகள் உள்ளன. இந்த வழக்குகள் தொழிலாளா்கள், மக்களின் பிரச்னைகளுக்காகப் போராடியதற்காக சந்தித்தவையாகும்.

புதுவையின் உரிமைக்காகப் பாடுபடக்கூடிய மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி ஆட்சி அமைய வேண்டும். சேதுசெல்வத்துக்கு மக்கள் ஆதரவு தர வேண்டும் என்றாா் அவா்.

நிகழ்வில் முன்னாள் அமைச்சா் ஆா்.விஸ்வநாதன், முன்னாள் எம்.எல்.ஏ. நாரா.கலைநாதன், அபிஷேகம் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.