கர்ப்பிணியை 1 மணி நேரம் சாலையில் நிற்க வைத்த போக்குவரத்து உதவி ஆய்வாளர்!

கர்ப்பிணி பெண்னை 1 மணி நேரத்திற்கு மேலாக சாலையில் நிற்க வைத்த சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.
கர்ப்பிணியை 1 மணி நேரம் சாலையில் நிற்க வைத்த போக்குவரத்து உதவி ஆய்வாளர்!

கர்ப்பிணி பெண்னை 1 மணி நேரத்திற்கு மேலாக சாலையில் நிற்க வைத்த சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.

புதுச்சேரியில், மருத்துவமனை சிகிச்சைக்கு ஒரே இருசக்கர வாகனத்தில் கர்ப்பிணி பெண் உள்பட 3 பேர் பயணம் செய்துள்ளனர்.

அவர்களை தடுத்து நிறுத்திய போக்குவரத்து உதவி ஆய்வாளர் ரூ.1000 அபராதம் கேட்டு, கர்ப்பிணி பெண்னை 1 மணி நேரத்திற்கு மேலாக சாலையில் நிற்க வைத்த சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் வீராணத்தை சேர்ந்தவர் முரசொலி, இவரது மனைவி இலக்கியா(19), நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு இன்று காலை பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அவரை அவரது கணவர் மற்றும் உறவினர் பெண்மனி கலை ஆகியோர் ஒரே இருசக்கர வாகனத்தில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அழைத்து  வந்துள்ளனர்.

அப்போது ஜிப்மர் மருத்துவமனை அருகே வடக்கு போக்குவரத்து உதவி ஆய்வாளர் ஆறுமுகம் வாகன தனிக்கையில் ஈடுப்பட்டிருந்தார். கர்ப்பிணி பெண் உள்பட மூன்று பேர் ஒரே இருசக்கர வாகனத்தில் வருவதை கண்ட அவர் அவர்களை நிறுத்தி, மூன்று பேர் ஒரே வாகனத்தில் வந்ததற்கு ரூ.1000 அபராதம் செலுத்தி விட்டு செல்லுமாறு கூறியுள்ளார். 

அப்போது முரசொலி தன்னிடம் பிரசவ வைத்திய செலவிற்க்கு மட்டுமே பணம் உள்ளதாக தெரிவித்துள்ளார்,  இதனை பொருட்படுத்தாத உதவி ஆய்வாளர் அபராதம் செலுத்திவிட்டு தான் செல்ல வேண்டும் என வேண்டும் என வலியுறுத்தி கர்ப்பினி பெண் உள்பட மூவரையும் 1 மணி நேரத்திற்கு மேலாக நிற்க வைத்துள்ளார். 

இதனை பார்த்த அவ்வழியே சென்ற தன்வந்திரி நகர் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன், உதவி ஆய்வாளர் ஆறுமுகத்திடம் பேசி, கர்ப்பிணி பெண்னை அவரது கணவர் உடன் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். போக்குவரத்து உதவி ஆய்வாளர் ஆறுமுகத்தின் இந்த செயல் அனைவரையும்  அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com