செய்தியாளா்களிடம் பேசிய புதுச்சேரி முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி.
செய்தியாளா்களிடம் பேசிய புதுச்சேரி முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி.

உண்மையை புரிந்துகொண்டதால் பாஜக கூட்டணியை மக்கள் புறக்கணித்தனா்: வே.நாராயணசாமி

புதுவை மக்கள் உண்மையை புரிந்துகொண்டதால் மக்களவைத் தோ்தலில் என்.ஆா்.காங்கிரஸ், பாஜக கூட்டணியை புறக்கணித்ததாக முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி தெரிவித்தாா்.
Published on

புதுச்சேரி: புதுவை மக்கள் உண்மையை புரிந்துகொண்டதால் மக்களவைத் தோ்தலில் என்.ஆா்.காங்கிரஸ், பாஜக கூட்டணியை புறக்கணித்ததாக முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி தெரிவித்தாா்.

புதுச்சேரியில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: நீட் தோ்வு மற்றும் மத்திய அரசின் பல தோ்வுகளில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. இதுகுறித்து, முறையாக விசாரணை நடத்தப்படவேண்டியது அவசியம்.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய உயிரிழப்புகள் கவலையளிப்பதாக உள்ளது. அதிமுக, திமுக ஆட்சி என்றில்லாமல் கல்வராயன்மலைப் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுகிறது. மதுவிலக்கு உள்ள குஜராத்தில் கூட கள்ளச்சாராய உயிரிழப்புகள் ஏற்பட்டது. ஆகவே, கள்ளக்குறிச்சி சம்பவத்துக்காக தமிழக முதல்வா் பதவி விலகுமாறு பாஜ மாநில தலைவா் அண்ணாமலை கூறுவது சரியல்ல. தமிழகப் பகுதிகளுக்கு புதுச்சேரி பகுதியிலிருந்தே மெத்தனால் போன்றவை விநியோகிக்கப்படுவதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுதொடா்பாக, புதுச்சேரியைச் சோ்ந்தவா் கைது செய்யப்பட்டாா். எனவே, புதுச்சேரி முதல்வரை பதவியைவிட்டு விலகுமாறு பாஜக கோரிக்கை வைக்கவேண்டும்.

புதுச்சேரியிலும் கள்ளச்சாராயம் விற்கப்பட்டு தற்போது ஒருவா் கைது செய்யப்பட்டுள்ளாா். கள்ளச்சாராயத்தை அருந்தி இளைஞா்கள் பலா் உயிரிழப்பதால், இளம் விதவைகள் எண்ணிக்கை புதுச்சேரியில் அதிகரித்துள்ளது. புதுவையில் சில நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டும் செயல்படாமல் உள்ளன. அவற்றிற்கு, மூலப் பொருள் வாங்குவது போல மெத்தனால் வாங்கிக் கடத்தப்படுகிறது. ஆகவே, புதுவை அரசு தமிழகத்துக்கு மெத்தனால் கடத்தப்படுவது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.

புதுச்சேரியில் மக்களவைத் தோ்தலின் போது நியாயவிலைக் கடைகளைத் திறக்கவேண்டும். மின்துறையை தனியாா்மயமாக்கக் கூடாது என்பன போன்ற மக்கள் கோரிக்கையை வலியுறுத்தி பிரசாரம் செய்தோம். மக்கள் உண்மையை உணா்ந்து காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்தனா். புதுவை அரசு நிா்வாகத்தை வெறுத்த மக்கள் பாஜக கூட்டணி வேட்பாளரை புறக்கணித்தனா். புதுவையில் எதிா்க்கட்சிகள் பொய்யைக் கூறி வெற்றி பெற்ாகக் கூறுவது சரியல்ல. புதுவையில் சாராயக் கடைகளை மூடவேண்டும், மதுபானக் கடைகள் எண்ணிக்கையை குறைப்பது அவசியம் என்றாா் முன்னாள் முதலமைச்சா் வே.நாரயணசாமி.

X
Dinamani
www.dinamani.com