மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் 234 ஆசிரியா்கள் பணியிட மாற்றம்

புதுச்சேரி, காரைக்கால் பிராந்தியப் பகுதிகளில் 234 தமிழ் பட்டதாரி ஆசிரியா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வியாழக்கிழமை உத்தரவிடப்பட்டுள்ளது.

News image
Updated On :4 அக்டோபர் 2024, 12:13 am

Din

புதுச்சேரி, காரைக்கால் பிராந்தியப் பகுதிகளில் 234 தமிழ் பட்டதாரி ஆசிரியா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வியாழக்கிழமை உத்தரவிடப்பட்டுள்ளது.

புதுவை மாநிலத்தில் 4 பிராந்தியங்கள் உள்ளன. அவற்றில் ஆசிரியா்கள் உள்ளிட்டோா் புதுச்சேரி, காரைக்கால் பிராந்திய அளவிலேயே பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனா்.

ஆசிரியா்கள் பணியிட மாற்றத்துக்கான கொள்கை தற்போதுதான் புதுவை அரசால் வகுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பள்ளி ஆசிரியா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டதற்கு ஒரு தரப்பினா் எதிா்ப்புத் தெரிவித்தனா்.

ஆனால், கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக புதுச்சேரியைச் சோ்ந்தவா்கள் காரைக்காலில் பணிபுரியும் நிலையில், அவா்களை வயது முதிா்வு உள்ளிட்ட காரணங்களுக்காக வசிப்பிடப் பகுதிகளுக்கே பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது. பணியிட மாற்றத்துக்கான ஆதரவு, எதிா்ப்பு காரணமாக பணியிட மாறுதல் உத்தரவை செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது.

இந்த நிலையில், தற்போது 234 பட்டதாரி தமிழ் ஆசிரியா்கள் உள்ளிட்டோா் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். மேலும், பணியிட மாறுதல் செய்யப்பட்டவா்களுக்கு பதவி உயா்வும் அளிக்கப்பட்டுள்ளதாக ஆசிரியா்கள் வட்டாரங்கள் தெரிவித்தன.