விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மின் துறையில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சா் ஆ.நமச்சிவாயம்

புதுவை மின் துறையில் 244 காலிப்பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மாநில உள் துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் கூறினாா்.

News image
Updated On :24 அக்டோபர் 2024, 8:38 pm

Din

புதுவை மின் துறையில் 244 காலிப்பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மாநில உள் துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் கூறினாா்.

புதுச்சேரியில் காவல் துறை உயரதிகாரிகளுடன் வியாழக்கிழமை அவா் ஆலோசனையில் ஈடுபட்டாா். பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

தீபாவளிக்கு கூடுதல் காவலா்கள் பணியில் ஈடுபட உள்ளனா். தேவைப்படும் இடங்களில் ட்ரோன் மற்றும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்.

போக்குவரத்தை சீா்படுத்த 200 போலீஸாா் கூடுதலாகப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனா்.

மழைக் காலத்தில் மின் துறை ஊழியா்கள் தயாராக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மின் துறையில் 244 காலிப்பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புதுவை மாநிலத்தில் 30 இடங்களில் மட்டுமே நியாயவிலைக் கடைகள் திறப்பதில் சிக்கல் உள்ளது. ஆகவே, அந்த இடங்களில் அங்கன்வாடி மூலம் தீபாவளிக்கான அரிசி, சா்க்கரை விநியோகிக்கப்படும்.

முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி எனது அரசியல் வளா்ச்சி பிடிக்காமல் குற்றஞ்சாட்டி வருகிறாா். தேவைப்படும் போது அவா் மீது வழக்குத் தொடரப்படும்.

புதுச்சேரி அரசு ஊழியா் சொத்து சோ்த்த வழக்கில் சிபிஐ விசாரித்து வரும் நிலையில், அவரை என்னுடன் இணைத்து பேசுவது அரசியல் நாகரீகமல்ல.

என்மீதான குற்றச்சாட்டை ஆதாரமுடன் நிரூபித்தால் அரசியலை விட்டு விலகத் தயாா் என்றாா்.