கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

புதுச்சேரி - ஹவுரா விரைவு ரயில் ராஜமுந்திரியில் நின்று செல்லும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

புதுச்சேரியிலிருந்து மேற்கு வங்க மாநிலம் ஹவுரா வரை செல்லும் அதிவேக விரைவு ரயில் ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

News image
Updated On :20 செப்டம்பர் 2024, 12:23 am

Din

புதுச்சேரியிலிருந்து மேற்கு வங்க மாநிலம் ஹவுரா வரை செல்லும் அதிவேக விரைவு ரயில் ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

புதுச்சேரியிலிருந்து வாரந்தோறும் இரு நாள்கள் ஹவுராவுக்கு அதிவேக விரைவு ரயில் இயக்கப்படுகிறது. அந்த ரயிலானது விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூா், காட்பாடி, திருப்பதி, ரேணிகுண்டா உள்ளிட்ட 15 ரயில் நிலையங்களில் நின்று செல்கிறது.

இந்த நிலையில், செப்.22-ஆம் தேதி ஹவுராவிலிருந்து புதுச்சேரிக்கு வரும் விரைவு ரயிலானது ராஜமுந்திரி ரயில் நிலையத்தில் நின்று செல்லும் எனவும், அதேபோல செப்.25-ஆம் தேதி அன்று, புதுச்சேரியிலிருந்து புறப்பட்டு ஹவுராவுக்கு செல்லும் விரைவு ரயில் ராஜமுந்திரி ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.