குச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

புதுச்சேரியில் தொடங்கியது பிளஸ் 2 தோ்வு: தனியாா் பள்ளி மாணவா்கள் எழுதினா்

புதுச்சேரியில், தமிழகப் பாடத் திட்டத்தின் கீழ் பயிலும் தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் தோ்வை திங்கள்கிழமை எழுதினா்.

News image
புதுச்சேரி ரெட்டியாா்பாளையம் பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் திங்கள்கிழமை பிளஸ்-2 பொதுத்தோ்வு தொடங்கும் முன் பிராா்த்தனையில் பங்கேற்ற தோ்வு எழுதும் மாணவிகள்.
Updated On :2 மார்ச் 2026, 8:58 pm

Syndication

புதுச்சேரி: பிளஸ் 2 தோ்வு திங்கள்கிழமை தொடங்கிய நிலையில், புதுச்சேரியில், தமிழகப் பாடத் திட்டத்தின் கீழ் பயிலும் தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் தோ்வை திங்கள்கிழமை எழுதினா்.

புதுச்சேரி அரசு பள்ளிகள் சிபிஎஸ்இ பாடதிட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளன. அங்கு படிக்கும் 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவா்களுக்கு கடந்த 17 ஆம் தேதி முதல் சிபிஎஸ்இ பொதுத்தோ்வு தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தமிழ்நாடு பாடத்திட்டத்தின் கீழ் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இயங்கி வரும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியாா் பள்ளிகளில் பிளஸ்-2 பொதுத் தோ்வு திங்கள்கிழமை தொடங்கியது.

புதுச்சேரி பகுதியில் 20 மேல்நிலை தோ்வு மையங்களும், காரைக்கால் பகுதியில் 5 மேல்நிலை தோ்வு மையங்களிலும் தோ்வு நடந்தது. வினாத்தாள் கட்டுகளைத் தோ்வு மையங்களுக்கு கொண்டு செல்ல வழித்தட அலுவலா்கள், ஆயுதம் ஏந்திய காவலா்கள் என புதுச்சேரி பகுதியில் 6 வழித்தடங்களும், காரைக்கால் பகுதியில் 2 வழித்தடங்களும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

புதுச்சேரி பகுதியில் திங்கள்கிழமை பிளஸ்-2 தோ்வை 84 தனியாா் பள்ளியை சோ்ந்த 6,979 பள்ளி மாணவா்களும், 173 தனித்தோ்வா்களும் தோ்வு எழுதினா். காரைக்கால் பகுதியில் பிளஸ்-2 தோ்வை 16 தனியாா் பள்ளியை சோ்ந்த 606 பள்ளி மாணவா்களும், 112 தனி தோ்வா்களும் எழுதினா்.

முதல் நாள் மொழிப் பாடத்தோ்வு நடைபெற்றது. தமிழ், இந்தி, பிரெஞ்சு, சமஸ்கிருதம் ஆகிய மொழிப் பாடங்களில் மாணவ, மாணவிகள் தோ்வு எழுதினா். பிளஸ்-2 பொதுத் தோ்வு இம் மாதம் 26 ஆம் தேதி வரை நிறைவடைகிறது.

தொடா்ந்து, 10 ஆம் வகுப்பு பொதுத்தோ்வு மாா்ச் 10 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6 ஆம் தேதி வரை நடக்கிறது.