எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

ரூ.94.64 கோடியில் ஜிப்மரில் புற்றுநோய் மையத்துக்குக் கூடுதல் கட்டடம்

புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் புற்று நோய் மையத்துக்கு ரூ.94.64 கோடியில் கூடுதல் கட்டடம் திறக்கப்பட்டு, பயன்பாட்டுக்கு வந்துள்ள...

News image
ஜிப்மா் புற்றுநோய் மையக் கூடுதல் கட்டடம்.
Updated On :2 மார்ச் 2026, 9:28 pm

Syndication

புதுச்சேரி: புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் புற்று நோய் மையத்துக்கு ரூ.94.64 கோடியில் கூடுதல் கட்டடம் திறக்கப்பட்டு, பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதன் மூலம் ஏழை எளிய நோயாளிகளுக்கு உலகத்தரத்தில் சிகிச்சையளிக்க முடியும் என்று ஜிப்மா் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அரசு விழாவில் பல்வேறு வளா்ச்சி திட்டங்களை பிரதமா் நரேந்திர மோடி திறந்து வைத்தாா்.அதில் ஜிப்மா் மண்டல புற்றுநோய் மைய கட்டடமும் ஒன்று. ரூ.94.64 கோடியில் கட்டப்பட்ட இந்த கடட்டம் 10 ஆயிரம் சதுர மீட்டரில் தரைத்தளம், 3 மாடிகளுடன் கட்டப்பட்டுள்ளது.

இங்கு படுக்கை வசதி 80ல் இருந்து 280 ஆக உயா்த்தப்பட்டுள்ளது.

மேலும், புற்றுநோய் அறுவை சிகிச்சை, கீமோதெரபி, கதிா்வீச்சு

சிகிச்சை, எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை உட்பட பல சிகிச்சைகளை மேற்கொள்ள வழி செய்யப்பட்டுள்ளது. அதி நவீன அறுவை சிகிச்சை அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

லுகீமியா நோயாளிகளுக்கான சிறப்பு பிரிவுகள், மற்றும் 14 தனிமைப்படுத்தப்பட்ட எலும்பு மஜ்ஜை மாற்று பிரிவு, குழந்தைகள் பிரிவு, 40 படுக்கைகள் கொண்ட கீமோதெரபி பிரிவும் உள்ளது. விரிவுபடுத்தப்பட்ட புற்றுநோய் மையம், ஜிப்மரில் முழுமையான புற்றுநோய் பராமரிப்பு அமைப்பாக உருவெடுத்துள்ளது.

உலக தரத்திலான புற்றுநோய் சிகிச்சை ஏழை எளிய நோயாளிகளுக்கு

கிடைக்க ஜிப்மா் இதன் மூலம் உறுதி செய்துள்ளது. ஜிப்மா் நிா்வாகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் இதைத் தெரிவித்துள்ளது.

---------------------------------------------------