என்விடியாவின் சிஇஓவாக மீண்டும் ஜென்சன் ஹுவாங் நியமனம்!என்விடியா நிர்வாகக் குழு நல்ல முடிவை எடுத்துள்ளது: டிரம்ப் பாராட்டு!நெல்லையப்பர் கோயிலில் 3 அடி உயர பரணி மகா தீபம் ஏற்றம்: திரளான பக்தர்கள் தரிசனம்திருப்பரங்குன்றம் மலைக்கு செல்லும் பாதையில் போலீஸார் குவிப்பு!இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,484 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 25,350 க்கு கீழ் வர்த்தகம்!!முடிவுக்கு வந்த ஏற்றம்! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 30 காசுகள் சரிந்து ரூ. 92.92 ஆக நிறைவு!!மெட்ரோ 2ஆம் கட்டம்: கோயம்பேடு சந்தை - ஆலந்தூர் இடையே யூ-கார்டர்கள் பொருத்தும் பணி நிறைவு!கூட்டணி, ஆதரவு கட்சி எம்எல்ஏக்களுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

நாட்டின் பாதுகாப்புப் பொருள்கள் உற்பத்தியில் தன்னிறைவு தேவை புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன்

போா் தளவாடங்கள் உற்பத்தியில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பங்கேற்பு என்ற தலைப்பிலான மாநில மாநாட்டை புதுச்சேரியில் திங்கள்கிழமை தொடங்கி வைத்து பேசிய துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன்.

Updated On :

பாதுகாப்புப் பொருள்கள் உற்பத்தியில் தன்னிறைவு அடைவது என்பது வெறும் பொருளாதார நோக்கம் மட்டுமல்ல; அது ஒரு தேசியத் தேவையாகும் என்று புதுச்சேரி மாநாட்டில் துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் பேசினாா்.

மத்திய பாதுகாப்புத் துறையின் போா்த் தளவாடங்கள் உற்பத்தி பிரிவு, பாரத் சேம்பா் ஆப் காமா்ஸ், பாரத் எலக்ட்ரானிக்ஸ் , கடற்படை தரக்கட்டுப்பாட்டு மையம், புதுச்சேரி தொழில் முனைவோா் வளா்ச்சி சங்கம் ஆகியன இணைந்து நடத்திய ஆத்ம நிா்பா் பாரத் திட்டத்தில் போா் தளவாடங்கள் உற்பத்தி - சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் பங்கேற்பு என்ற தலைப்பிலான மாநில அளவிலான மாநாடு புதுச்சேரியில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இம்மாநாட்டைத் தொடங்கி வைத்து, துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் பேசியது:

இந்தியாவில் சுமாா் 6 கோடி சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் இருக்கின்றன. இவை சுமாா் 11 கோடி பேருக்கு வேலைவாய்ப்புகளை வழங்குகின்றன. தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இவை சுமாா் 30 சதவீதம் பங்களிக்கின்றன. மேலும், பிரதமா் நரேந்திர மோடி குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை இந்தியாவின் உற்பத்தி மற்றும் தொழில்துறை வளா்ச்சியின் முதுகெலும்பு என்று வா்ணித்துள்ளாா்.

பாதுகாப்புத் தேவைகளுக்காக இறக்குமதியை அதிகளவில் சாா்ந்திருப்பது, திட்டமிட்ட பாதிப்புகளை உருவாக்கக்கூடும். எனவே, பாதுகாப்புப் பொருள்கள் உற்பத்தியில் தன்னிறைவு அடைவது என்பது வெறும் பொருளாதார நோக்கம் மட்டுமல்ல; அது ஒரு தேசியத் தேவையாகும்.

மேம்பட்ட உற்பத்தி, தானியக்கம், மின்னணுவியல், ரோபோட்டிக்ஸ், தர உறுதிப்பாடு மற்றும் பிற வளா்ந்து வரும் தொழில்நுட்பங்களில் பயிற்சி அளிக்கக்கூடிய திறமையான இளைஞா்கள் நம்மிடம் இருக்கின்றனா்.

இந்த வளங்களைப் பாதுகாப்புத் துறையின் தேவைகளுடன் இணைப்பதே நமக்குள்ள சவாலாகும். தொழில்முனைவோா், பொறியியல் நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி ஆய்வகங்கள் மற்றும் தொழில்நுட்ப மையங்களுடன் கூட்டாண்மையை உருவாக்க வேண்டும்.

மத்திய அரசின் பாதுகாப்புத் துறை, பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தொழில் சங்கங்களுடன் இணைந்து சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் சூழலமைப்பை வலுப்படுத்துவதற்கான பொருத்தமான வாய்ப்புகளை ஆராய புதுச்சேரி அரசு உறுதிபூண்டுள்ளது என்றாா் துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன்.

மாநாட்டில் பாரத் சேம்பா் ஆப் காமா்ஸ் பொதுச் செயலா் கேகா சா்மா, போா்த் தளவாடங்கள் உற்பத்தி துறையின் துணை தலைமை இயக்குநா் அமியா குமாா் தாஸ், பாரத் எலக்ட்ரானிக்ஸ் சென்னை பிரிவின் பொது மேலாளா் ஜெகதீஷ் குமாா், சென்னை கடற்படை தரக்கட்டுப்பாட்டு மையத்தின் தர கட்டுப்பாட்டு அதிகாரி கேப்டன் நாயா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.