/

போலீஸார் மீது டாஸ்மாக் பணியாளர்கள் புகார்

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் போலீஸார் பணம் கேட்டு மிரட்டுவதாக, பணியாளர்கள் புதன்கிழமை எஸ்.பி. அலுவலகத்தில் புதன்கிழமை புகார் மனு அளித்தனர்.

News image
Updated On :28 டிசம்பர் 2017, 3:48 am

தினமணி

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் போலீஸார் பணம் கேட்டு மிரட்டுவதாக, பணியாளர்கள் புதன்கிழமை எஸ்.பி. அலுவலகத்தில் புதன்கிழமை புகார் மனு அளித்தனர்.
 டாஸ்மாக் பணியாளர்கள் சங்க மாநிலப் பொருளாளர் ஜெயகணேஷ், மாநிலத் துணைச் செயலாளர் கோபாலகிருஷ்ணன், மாவட்டத் தலைவர் இளங்கோ தலைமையிலான விழுப்புரம் மாவட்ட டாஸ்மாக் பணியாளர்கள் புதன்கிழமை பிற்பகல் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு திரண்டு வந்து புகார் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறியதாவது:
 விழுப்புரம் மாவட்டத்தில் 210-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் மதுக்கடைகள் இயங்குகின்றன.
 இந்த கடைகளின் வசூல் தொகையை இரவு நேரத்தில் பாதுகாப்பாக எடுத்துச் செல்ல உடன் வரும் காவலர்கள் ரூ.200 முதல் ரூ.500 வரை பெற்றும், சிலர் மதுப் புட்டிகள் பெற்றும் அடாவடி செய்து மிரட்டுகின்றனர்.
 குறிப்பாக, உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி, திண்டிவனம், விழுப்புரம், செஞ்சி வட்டத்துக்கு உள்பட்ட போலீஸாரால் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ளோம்.
 ஆகவே, இதுபோன்று போலீஸார் பணம் வசூல் செய்வதை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு செய்து, போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.