மத்திய அரசைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்
பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்ட மத்திய அரசைக் கண்டித்து, விழுப்புரத்தில் புதன்கிழமை திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.


பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்ட மத்திய அரசைக் கண்டித்து, விழுப்புரத்தில் புதன்கிழமை திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.
மத்திய பாஜக அரசு கடந்த ஆண்டு, நவம்பர் 8-ஆம் தேதி இரவு உயர் மதிப்பு கொண்ட ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என அறிவித்தது. இதைத் தொடர்ந்து, பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்தனர்.
இந்த நாளை மற்ற எதிர்க்கட்சிகள் கருப்பு தினமாக அறிவித்து நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தின.
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விழுப்புரத்தில் திமுக சார்பில் மத்திய, தெற்கு மாவட்டங்கள் சார்பில் மாவட்ட ஆட்சியரகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மத்திய மாவட்டச் செயலாளரும், எம்எல்ஏவுமான க.பொன்முடி, தெற்கு மாவட்டச் செயலாளர் அங்கையர்கன்னிஆகியோர் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுகவினர் கருப்புச் சட்டை அணிந்து, மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணமான பண மதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். பண மதிப்பிழப்பு நடவடிக்கை, பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கல், ஜி.எஸ்.டி. வரி, வேலை வாய்ப்பின்மை போன்றவைகளால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை பற்றி எல்லாம் கவலைப்படாமல் மோடியின் மதிப்பை பெருக்குவதிலேயே ஓ.பி.எஸ்.வும், ஈ.பி.எஸ்.வும் உள்ளனர் என்று பொன்முடி பேசினார்.
சட்டப்பேரவை உறுப்பினர்கள் ராதாமணி, உதயசூரியன், வசந்தம் கார்த்திகேயன், தலைமை செயற்குழு உறுப்பினர் ஜனகராஜ், தெற்கு மாவட்ட அவைத்தலைவர் ராமமூர்த்தி, முன்னாள் எம்எல்ஏ புஷ்பராஜ், மாவட்ட பொருளாளர் புகழேந்தி, துணைச் செயலாளர்கள் முத்தையன், மைதிலி ராஜேந்திரன், ஜெயச்சந்தின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
காங்கிரஸ்.... விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகே காங்கிரஸ் கட்சி சார்பில், மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மத்திய மாவட்டத் தலைவர் சீனிவாசகுமார் தலைமையில் மத்திய அரசைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் நகரத் தலைவர் செல்வராஜ், மாவட்ட துணைத் தலைவர்கள் தயானந்தம், ராதாகிருஷ்ணன், முன்னாள் மாவட்டத் தலைவர் ராமமூர்த்தி, மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் சிவ, ராஜாராம், சுரேஷ்ராம், வாசிம்ராஜ், மோகனகிருஷ்ணன், முருகன், பாலசுப்பிரமணியன், முன்னாள் மாவட்டத் தலைவர்கள் தனுசு, கஸ்தூரி, மாவட்டப் பொதுச் செயலாளர் ராம்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, மோடி அரசின் நிர்வாகத் திறமையின்மை, மக்கள் விரோத போக்குகளை விளக்கும் வகையில் பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரங்களை வழங்கினர்.
கம்யூனிஸ்ட் கட்சிகள்... பாஜக அரசை கண்டித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகம் எதிரே கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், சி.பி.எம்.எல் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றன. இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டத் தலைவர் சரவணன் தலைமை வகித்தார்.
இதில், மார்சிஸ்ட் வடக்கு மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியன், மாநிலக்குழு உறுப்பினர்கள் கலியன், ஆனந்தன் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ராமமூர்த்தி, இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட துணைச் செயலாளர்கள் கோவிந்தராஜ், சௌரிராஜன், மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் ராமசாமி, மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் மத்திய கமிட்டி உறுப்பினர் பாலசுந்தரம், மாவட்டச் செயலாளர் வெங்கடேசன், மாவட்ட அமைப்பாளர் செண்பகவள்ளி, எஸ்.யு.சிஐ. மாநில அமைப்புக் குழு உறுப்பினர் அனவரதன், பாண்டியன், அல்லிமுத்து உள்ளிட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
திண்டிவனத்தில்... திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பில், திண்டிவனம் காந்தி சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது. திமுக எம்.எல்.ஏ.க்கள் இரா.மாசிலாமணி, சீத்தாபதி சொக்கலிங்கம், மாநில திமுக மருத்துவரணியின் துணைச் செயலர் சேகர், மாநில பொதுக் குழு உறுப்பினர் ரமணன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலர் மு.சேரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலரும், செஞ்சி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான கே.எஸ்.மஸ்தான் தலைமை வகித்து, கண்டன உரையாற்றினார். கூட்டத்தில் திமுக முன்னாள் எம்.எல்.ஏ. சேதுநாதன், முன்னாள் மாவட்டச் செயலர் அசோகன், ஒன்றியச் செயலர் சொக்கலிங்கம், ராஜாராம் உள்ளிடகலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...