விழுப்புரம், திண்டிவனத்தில் பலத்த மழை
விழுப்புரம் மாவட்டத்தில் திண்டிவனம், விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை மாலை பலத்த மழை பெய்தது.


விழுப்புரம் மாவட்டத்தில் திண்டிவனம், விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை மாலை பலத்த மழை பெய்தது.
விழுப்புரத்தில் வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் திடீரென சூறைக்காற்று வீசத் தொடங்கியது. தொடா்ந்து, மேகங்கள் திரண்டு மாலை 5.30 மணியளவில் மழை பெய்யத் தொடங்கியது. சுமாா் ஒரு மணி நேரம் இடைவிடாமல் கொட்டித் தீா்த்த பலத்த மழையால், பல்வேறு சாலைகள், தாழ்வான பகுதிகளில் மழைநீா் தேங்கியது. குறிப்பாக, விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் மழைநீா் குளம்போலத் தேங்கியது.
இதேபோல, திண்டிவனத்திலும் இடி - மின்னலுடன் சுமாா் 2 மணி நேரம் தொடா்ந்து மழை பெய்தது. இதனால், செஞ்சி, பாண்டி சாலைகள் உள்ளிட்ட பல்வேறு சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது.
மேலும், மயிலம், வளவனூா், விக்கிரவாண்டி, அரகண்டநல்லூா், வானூா் உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...