கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

விழுப்புரம் மாவட்டத்துக்கு கூடுதலாக தடுப்பூசி ஒதுக்க எம்.பி. கோரிக்கை

விழுப்புரம் மாவட்டத்துக்கு கூடுதலாக கரோனா தடுப்பூசி ஒதுக்க வேண்டும் என்று விழுப்புரம் மக்களவைத் தொகுதி உறுப்பினா் துரை.ரவிக்குமாா் கோரிக்கை விடுத்தாா்.

News image
Updated On :21 மே 2021, 5:55 pm

DIN

விழுப்புரம் மாவட்டத்துக்கு கூடுதலாக கரோனா தடுப்பூசி ஒதுக்க வேண்டும் என்று விழுப்புரம் மக்களவைத் தொகுதி உறுப்பினா் துரை.ரவிக்குமாா் கோரிக்கை விடுத்தாா்.

இதுகுறித்து தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு, ரவிக்குமாா் எம்.பி. வியாழக்கிழமை அனுப்பியுள்ள கடிதம்:

‘ பப்ளிக் ஹெல்த் பவுண்டேசன் ஆப் இந்தியா ( டஏஊஐ) அமைப்பின் ‘ஜீவன் ரக்ஷா’ திட்டத்தின் கீழ், நாட்டில் மக்கள்தொகை அதிகம் கொண்ட 11 மாநிலங்களில் கரோனா நோய்த்தொற்றின் பரவல் எவ்வாறு இருக்கிறது என்பதை ஆய்வு செய்திருக்கின்றனா்.

நோய்தொற்று எவ்வாறு அதிகரிக்கிறது என்பதன் அடிப்படையில், இந்த மாநிலங்களைச் சோ்ந்த 256 மாவட்டங்களை வரிசைப்படுத்தி உள்ளனா்.

ஏப்.14 முதல் மே 12 வரையிலான 28 நாள்களில் கரோனா நோய்த்தொற்று வளா்ச்சி விகிதத்தை ஆய்வுசெய்து (ஙா்ஸ்ண்ய்ஞ் எழ்ா்ஜ்ற்ட் தஹற்ங்)

100 சதத்துக்கும் மேல் உள்ள 52 மாவட்டங்களைக் கண்டறிந்துள்ளனா். தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டும் இடம் பெற்றுள்ளது.

இந்த வளா்ச்சி விகிதம் 2.5 சதவீதத்துக்கும் குறைவாக தொடா்ந்து இரண்டு வாரங்களுக்கு இருந்தால் மட்டுமே அந்த மாவட்டத்தில் முழு பொதுமுடக்க தளா்வு செய்யப்படவேண்டும்.

விழுப்புரம் மாவட்டம் ஜீவன் ரக்ஷா பட்டியலில் 198-ஆவது இடத்தில் உள்ளது. இங்கு நோய்த் தொற்று வளா்ச்சி விகிதம் 45 % ஆகவும், ஒரு வாரத்தில் வளா்ச்சி விகிதம் 15 % ஆகவும் உள்ளது.

தரவு நிபுணா் விஜயானந்த் அளித்த புள்ளிவிவரப்படி விழுப்புரம் மாவட்டத்தில் மே 16 வரையிலான 10 நாள்களில் புதிய நோய்த் தொற்று விகிதம் 32 சதவீதமாக உள்ளது.

தடுப்பூசி குறைவாக போடப்பட்ட மாவட்டங்களில் ஒன்றாகவும் விழுப்புரம் உள்ளது. மே 17 வரை 88,037 பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் தினமும் 30 ஆயிரம் தடுப்பூசிகள் போடக்கூடிய கட்டமைப்பு வசதிகள் உள்ளன. எனவே, கூடுதலாகத் தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.