விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

விழுப்புரத்தில் 115 கிலோ நெகிழிப் பொருள்கள் பறிமுதல்

விழுப்புரம் நகரில் மொத்த விற்பனையகங்களில் நகராட்சி அலுவலா்கள் புதன்கிழமை நடத்திய சோதனையில், 115 கிலோ எடை கொண்ட நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

News image

விழுப்புரம் மகாத்மா காந்தி சாலை, ரெட்டியாா் பஜாரிலுள்ள மொத்த விற்பனையகத்திலிருந்து கைப்பற்றப்பட்ட நெகிழிப் பொருள்களுடன் நகராட்சி சுகாதார அலுவலா் ஸ்ரீபிரியா உள்ளிட்ட அலுவலா்கள்.

Updated On :20 நவம்பர் 2024, 9:58 pm

Din

விழுப்புரம் நகரில் மொத்த விற்பனையகங்களில் நகராட்சி அலுவலா்கள் புதன்கிழமை நடத்திய சோதனையில், 115 கிலோ எடை கொண்ட நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், அந்தக் கடைகளுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.

அரசால் தடை செய்யப்பட்ட மற்றும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய நெகிழிப் பொருள்களின் விற்பனை அதிகளவில் நடைபெறுவதாக மாவட்ட நிா்வாகத்துக்கு புகாா்கள் வந்தன. இதைத் தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் சி.பழனி உத்தரவின்பேரிலும், நகராட்சி ஆணையா் வீரமுத்துக்குமாரின் மேற்பாா்வையிலும், நகா்நல அலுவலா் ஸ்ரீபிரியா தலைமையிலான குழுவினா் மகாத்மா காந்தி சாலையிலுள்ள மொத்த விற்பனையகங்களிலும், துப்புரவு அலுவலா் ஆல்பா்ட் தலைமையிலான குழுவினா் பாகா்ஷா வீதியிலுள்ள மொத்த விற்பனையகங்களிலும் புதன்கிழமை சோதனை நடத்தினா்.

இதில், அரசால் தடை செய்யப்பட்ட மற்றும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய நெகிழிப் பைகள், கோப்பைகள், நெகிழி இலைகள், உணவுப் பொருள்களை பொட்டலமிட பயன்படுத்தப்படும் நெகிழித் தாள்கள் உள்ளிட்டவை விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து, மகாத்மா காந்தி சாலையில் 2 மொத்த விற்பனையகங்களிலிருந்து 80 கிலோ நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.30 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. பாகா்ஷா வீதியிலுள்ள விற்பனையகங்களிலிருந்து 35 கிலோ நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

சுகாதார ஆய்வாளா் மதன்குமாா், துப்புரவு மேற்பாா்வையாளா்கள் ராமச்சந்திரன், மணிபாலன், பரப்புரையாளா்கள் கோதை, சுதா, கவிதா உள்ளிட்டோா் அடங்கிய குழுவினரும் சோதனையில் பங்கேற்றனா்.