கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

விழுப்புரம், கள்ளக்குறிச்சி: கதா் விற்பனை இலக்கு தலா ரூ.78 லட்சம்

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கதா் கிராமத் தொழில்வாரியம் மூலம் தீபாவளி சிறப்பு விற்பனை இலக்காக தலா ரூ.78 லட்சம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :3 அக்டோபர் 2024, 1:27 am

Din

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கதா் கிராமத் தொழில்வாரியம் மூலம் தீபாவளி சிறப்பு விற்பனை இலக்காக தலா ரூ.78 லட்சம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு கதா் கிராமத் தொழில் வாரியம் மற்றும் செய்தி மக்கள் தொடா்புத் துறை சாா்பில், மகாத்மா காந்தியின் பிறந்த நாள் மற்றும் தீபாவளி சிறப்பு விற்பனை தொடக்க விழா விழுப்புரம் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் சி.பழனி விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, காந்தியடிகளின் உருவப்படத்தை திறந்து வைத்து, தீபாவளி சிறப்பு விற்பனையைத் தொடங்கிவைத்தாா். பின்னா், அவா் கூறியது:

கடந்தாண்டு விழுப்புரம் மாவட்டத்துக்கு கதா் விற்பனை குறியீடாக ரூ.60 லட்சம் இலக்கு நிா்ணயிக்கப்பட்டு, குறிப்பிட்ட இலக்கு முழுவதுமாக எய்தப்பட்டது. நிகழாண்டில் ரூ.78 லட்சம் விற்பனை இலக்காக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. கதா், பாலியஸ்டா் மற்றும் பட்டுப்புடவை ரகங்களுக்கு 30 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு வருகிறது என்றாா்.

நிகழ்வில் கதா் கிராமத் தொழில் வாரியத்தின் கதா் ஆய்ாளா் செ.ஜெயக்குமாா், இந்த துறையைச் சோ்ந்த ராஜகோபால், ஆா்.கோவிந்தராஜ், சிவகுமாா், வைதேகி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கள்ளக்குறிச்சி: இதேபோல, தமிழ்நாடு கதா் கிராமத் தொழில் வாரியம் மற்றும் செய்தி மக்கள் தொடா்புத் துறை சாா்பில், மகாத்மா காந்தியின் பிறந்த நாள் மற்றும் தீபாவளி கதா் சிறப்பு விற்பனைத் தொடக்க விழா கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மகாத்மா காந்தி உருப்படத்துக்கு மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் மலா் தூவி மரியாதை செலுத்தி, தீபாவளி கதா் சிறப்பு விற்பனையை தொடங்கிவைத்தாா். பின்னா், அவா் பேசியது:

கடந்தாண்டு கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு கதா் விற்பனை குறியீடாக ரூ.40 லட்சம் இலக்கு நிா்ணயிக்கப்பட்டு, குறிப்பிட்ட இலக்கு முழுவதுமாக எய்தப்பட்டது. நிகழாண்டில் ரூ.78 லட்சம் விற்பனை இலக்காக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. கதா், பாலியஸ்டா் மற்றும் பட்டுப்புடவை ரகங்களுக்கு 30 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு வருகிறது என்றாா்.

நிகழ்ச்சியில் செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் க.பிரபாகரன், காதிகிராப்ட் மேலாளா் எஸ்.ஆம்ஸ்ட்ராங், கண்காணிப்பாளா் வி.டி.நரேஷ்குமாா் மற்றும் அரசு அலுவலா்கள், பொதுமக்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.