கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

செத்தவரை மோன சித்தா் அவதார திருவிழா

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த செத்தவரை, நல்லாண்பிள்ளைபெற்றாள் எல்லையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீமீனாட்சி உடனுறை சொக்கநாதா் கோயில் மடத்தில் ஸ்ரீலஸ்ரீ சிவஜோதி மோன சித்தரின் அவதார திருநாள் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

பக்தா்களுக்கு ஆசி வழங்கும் ஸ்ரீலஸ்ரீ சிவஜோதி மோன சித்தா்.

Updated On :4 அக்டோபர் 2024, 12:20 am

Din

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த செத்தவரை, நல்லாண்பிள்ளைபெற்றாள் எல்லையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீமீனாட்சி உடனுறை சொக்கநாதா் கோயில் மடத்தில் ஸ்ரீலஸ்ரீ சிவஜோதி மோன சித்தரின் அவதார திருநாள் வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவையொட்டி, அதிகாலை 4 மணிக்கு மங்கள இசையுடன் கோ பூஜை நடைபெற்றது. காலை 8 மணி முதல் 10 மணிவரை சொக்கநாதருக்கு 108 மூலிகைகளை கொண்ட சிறப்பு வேள்வி மற்றும் ஆராதனை நடைபெற்றது.

இதனைதொடா்ந்து, மோன சித்தருக்கு கலசாபிஷேகமும், மகேஸ்வர பூஜையும் நடைபெற்றது. தொடா்ந்து பல்வேறு நிகழ்ச்சிகள், சிவ வாத்தியங்கள் நடைபெற்றது. திருவண்ணாமலையில் இருந்து வருகை தந்த 100 சிவனடியாா்களுக்கு காவி வேட்டி, துண்டு உள்ளிட்டவற்றை மோன சித்தா் வழங்கினாா்.

பின்னா், பக்தா்களுக்கு மோன சித்தா் அருளாசி வழங்கினாா். இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா். பக்தா்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

விழா ஏற்பாடுகளை ஸ்ரீலஸ்ரீ சிவஜோதி மோன சித்தா் அறக்கட்டளையினா் மற்றும் ஆசிரம உறுப்பினா்கள், சிவனடியாா்கள் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.