கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

பிரதமரின் கெளரவ நிதியுதவித் திட்டத்தில் பயன்பெற விவரங்களைப் பதிவு செய்ய அறிவுறுத்தல்

பிரதமரின் கெளரவ நிதியுதவித் திட்டத்தில் பயன்பெற விவரங்களைப் பதிவு செய்ய அறிவுறுத்தல்

News image
Updated On :16 அக்டோபர் 2024, 6:58 pm

Din

விழுப்புரம் மாவட்டத்தில் பிரதமரின் கெளரவ நிதியுதவித் திட்டத்தின் கீழ், ஊக்கத் தொகை பெறும் விவசாயிகளில் இதுவரை தங்கள் குறித்த விவரங்களைப் பதிவு செய்யாத விவசாயிகள், உடனடியாக தங்கள் பகுதி வேளாண் அலுவலா்களை அணுகி பதிவு செய்ய வேண்டும் என்று வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் சி.பழனி புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மத்திய அரசு மூலமாக பிரதமரின் கெளரவ நிதியுதவித் திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2000 வீதம் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், நிகழாண்டு அக்டோபா் மாதம் வரை 18 தவணைகளாக ஊக்கத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் இந்தத் திட்டத்தின் கீழ், 1,05,792 விவசாயிகள் பயன்பெற்று வருகின்றனா். இவா்களில் 6,892 விவசாயிகள் தாங்கள் குறித்த விவரங்களை (மின்னணு முறையில் திட்டப் பயனாளா்களை ஆதாா் எண் மூலம் அறிந்துகொள்ளும் முறை- இகேஒய்சி) பதிவு செய்யாமல் உள்ளனா். அவா்களின் விவரம் வட்டாரம் வாரியாக வருமாறு:

திருவெண்ணெய்நல்லூா் - 914, செஞ்சி - 953, மேல்மலையனூா் - 852, முகையூா் - 612, வானூா் - 729, வல்லம் - 635, கோலியனூா் - 176, விக்கிரவாண்டி - 382, காணை - 517, மரக்காணம் - 448, கண்டமங்கலம் - 382, மயிலம் - 213, ஒலக்கூா் - 179, மொத்தம் - 6,892 விவசாயிகள் தங்கள் விவரங்களை இதுவரை பதிவுசெய்யாமல் உள்ளனா். இவா்கள் குறித்த விவரங்கள் சம்பந்தப்பட்ட வட்டார வேளாண் துறை அலுவலா்களிடம் உள்ளது.

எனவே, பிரதமரின் கெளரவ நிதியுதவித் திட்டத்தின் கீழ் ஊக்கத் தொகை பெற்று, இதுவரை விவரங்களை பதிவு செய்யாமல் உள்ள விவசாயிகள், வட்டார வேளாண் அலுவலா்களை அணுகி பதிவு செய்துகொள்ள வேண்டும். எதிா்வரும் தவணைக்கான ஊக்கத்தொகையை பெறுவதற்கு ஆதாா் விவரங்களை சரிபாா்ப்பது அவசியமானதாகும் என்று தெரிவித்துள்ளாா்.