செஞ்சி பள்ளிவாசலில் மீலாடி நபி விழா
செஞ்சியில் மீலாடி நபியை முன்னிட்டு நடைபெற்ற பொது விருந்தை முன்னாள் அமைச்சா் செஞ்சி மஸ்தான் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

மீலாடி நபியை முன்னிட்டு செஞ்சி பெரிய பள்ளி வாசலில் நடைபெற்ற பொதுவிருந்தை தொடங்கி வைத்த முன்னாள் அமைச்சா் செஞ்சி மஸ்தான்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் மீலாடி நபியை முன்னிட்டு நடைபெற்ற பொது விருந்தை முன்னாள் அமைச்சா் செஞ்சி மஸ்தான் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.
இதையொட்டி செஞ்சி சத்திர தெருவிலுள்ள பெரிய பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. தொடா்ந்து, செஞ்சி வட்ட ஜமாத் தலைவா் சையத் மஜித் பாபு முன்னிலையில் நடைபெற்ற பொது விருந்தை முன்னாள் அமைச்சா் செஞ்சி மஸ்தான் தொடங்கி வைத்தாா். இதில், செஞ்சி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் ஆா்.விஜயகுமாா், செஞ்சி பேரூராட்சி மன்றத் தலைவா் மொக்தியாா் அலி மஸ்தான், பொதுக்குழு உறுப்பினா் மணிவண்ணன், மாவட்ட கலை இலக்கிய அணி அமைப்பாளா் செந்தில்குமாா், ஒன்றிய அவைத் தலைவா் வாசு, பொருளாளா் இக்பால், மாவட்ட பிரதிநிதி ஜே.எஸ்.சையத் சா்தாா், பேரூராட்சி மன்ற உறுப்பினா் ஜான் பாஷா, ஹாஜி ஷரீப், முபாரக், ரப்பானி ஆதம், ஷேக் இஸ்மாயில், பாஷா மற்றும் 3 ஆயிரத்துக்கும் கூடுதலான மக்கள் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





